எழுத்துப் பிழை
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து எழுத்துப் பிழை பற்றிய செய்திகளைத்தொகுத்து கொடுத்துள்ளோம்.
பிழை நீக்கி எழுதுதல்
• ஒருவர் பேசும்போதும் எழுதும்போதும் பிழையின்றிப் பேசவும் எழுதவும் வேண்டும். பேச்சில் அல்லது எழுத்தில் பிழையிருப்பின் பொருள் மயக்கம் ஏற்படும். எனவே, சொற்களிலும் தொடர்களிலும் பிழைவராமல் காத்தல் வேண்டும்.
1. திணை, பால், எண், இடம், காலம், மரபு ஆகியன பிழையாக வாராமல் தொடரை எழுதுதல் வேண்டும்.
2. எழுவாய் உயர்திணையாக இருந்தால் பயனிலையும் உயர்திணையாக இருத்தல் வேண்டும்.
— (எ.கா) பொன்னன் தொடரோட்டத்தில் கலந்துகொண்டான்.
3. எழுவாய் அஃறிணையாக இருந்தால் பயனிலையும் அஃறிணையாக இருத்தல் வேண்டும்.
— (எ.கா.) பசு புல் மேய்ந்தது.
4. எழுவாய், ஐம்பால்களுள் எந்தப் பாலில் உள்ளதோ அதற்கேற்பப் பயனிலையைப் பெறல் வேண்டும்.
— (எ.கா)
• அழகன் பாடினான்.
• வள்ளி ஆடினாள்.
• புலவர்கள் பாடல்களை • இயற்றினார்கள்.
• யானை பிளிறியது.
• மான்கள் ஓடின.
5. எழுவாய் – கள் விகுதி பெற்றால் பயனிலையும் கள் விகுதி பெறுதல் வேண்டும்.
எழுவாய் – அர் விகுதி பெற்றால் பயனிலையும் அர் விகுதி பெறுதல் வேண்டும்.
— (எ.கா)
• மாணவர்கள் சிறப்பாகத் தேர்வு எழுதினார்கள்.
• மூவர் தேவாரத்தைப் பாடினர்.
6. எழுவாய் ஒருமையாக இருந்தால் பயனிலையும் ஒருமையாக இருத்தல் வேண்டும்.
எழுவாய் பன்மையாக இருந்தால் பயனிலையும் பன்மையாக இருத்தல் வேண்டும்.
— (எ.கா)
• என் புத்தகம் இதுவன்று.
• என் புத்தகங்கள் இவையல்ல.
8. தொடரில் காலவழு ஏற்படாமல் காத்தல் வேண்டும்.
— (எ. கா)
• தலைவர் நாளை மதுரையில் பேசுவார்.
• நேற்று மழை பொழிந்தது.
Book Back Questions
1. மாதவி மகளும் மாதவர்க் காண்டலும் (லு/ளு/ழு )
2. வினைப்பயன் விளையும் கால் (லை/ளை/ழை)
3. கொலையே களவே காமத்தீ விழைவே (லை/ளை/ழை)
4.கலங்கிய உள்ளக் கவலையில் தோன்றுவர். (ல்/ள்/ழ்)
1. பேருந்து நிருத்துமிடத்தில் பல்லிக்கூடம் இருக்கிறது. (பள்ளிக்கூடம்)
2. இன்றும் நம் நாட்டில் பெறுவாரியான மக்கல் உள்ளார்கலே. (மக்கள்)
3. ஏறிகளில் மலைநீர் சேமித்தாள் கிணருகளில் நீர் வற்றாது. (மழைநீர்)
4. ஆளமரத்தின் விளுதினைப் பாம்பென்று குறங்கு அஞ்சியது. (குரங்கு)
5. கொஞ்சம் வென்னி வைத்துத் தந்தால் என்ணை தேய்த்துக் கொல்வேன். (என்னை)
1. தெண்றல் — தென்றல்
2. கன்டம் — கண்டம்
3. நன்ரி — நன்றி
4. மன்டபம் — மண்டபம்
1. கோவலன் சிலம்பு விற்கப் போனாள். போனான்.
2. அரசர்கள் நல்லாட்சி செய்தார். (செய்தார்கள்)
3. பசு கன்றை ஈன்றன. (ஈன்றது)
4. மேகங்கள் சூழ்ந்து கொண்டது. (கொண்டன)
5. குழலி நடனம் ஆடியது. (ஆடினாள்)
1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அயல் கட்டியது.(கட்டினார்).
2. மதியழகள் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள். (வைத்தான்)
3. மழையே பயிர்க்கூட்டமும் பயிரிக்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன. (புரிகின்றது)
4. தீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியனை வைத்திருக்கிறோம். (வைத்திருக்கிறார்கள்)
5. குராவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான். (தப்பித்தனர்)
1. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும். (வல்லுநராக)
2. நல்ல தமிழுக்கு எழுதுவோம். (தமிழில்)
3. பவளவிழிதான் பரிசு உரியவள். (பரிசுக்கு)
4. துன்பத்தால் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான். (துன்பத்தை)
5. குழலியும் பாடத் தெரியும். (குழலிக்குப்)
1 .பிழையான தொடரைக் கண்டறிக.
அ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.
ஆ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர்.
இ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.
ஈ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
2. பேச்சுத்தமிழில் அமைந்த தொடரைத் தேர்க.
அ) அவருக்கு நல்லது கெட்டது நல்லாத் தெரியும்.
ஆ) புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
இ) வறட்சி எல்லா இடங்களையும் பாதித்துள்ளது.
ஈ) மயில்கள் விறலியரைப் போல் ஆடுகின்றன.
தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
எ.கா.
— நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது.
Ans: — நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.
1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு (அரசு)நிதி ஒதுக்கியது.
2. ரங்கன் வெங்கலப் (வெண்கலப்) பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.
3.மானம் (வானம்) பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
4. ஐப்பசி அடைமழையில் ஊருனி (ஊருணி) நிறைந்தது.
5. இன்னிக்கு (இன்றைக்கு) சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்.
Out of books
1. சிகப்பு – சிவப்பு
2. அகண்ட – அகன்ற
3. அதுகள் – அவை
4. அருவாமனை – அரிவாள்மனை
5. அருகாமையில் – அருகில்
6. அறுவறுப்பு – அருவருப்பு
7. அங்கிட்டு – அங்கு
8. அமக்களம் – அமர்க்களம்
9. அத்தினி – அத்தனை
10. அவுத்து – அவிழ்த்து
11. ஆச்சு – ஆயிற்று
12. இரும்பல் – இருமல்
13. இங்கிட்டு – இங்கு
14. இறச்சி – இறைச்சி
15. இவையன்று – இவையல்ல
16. ஈர்கலி – ஈர்கொல்லி
17. உடமை – உடைமை
18. உருச்சி – உரித்து
19. ஊரணி – ஊருணி
20. ஒத்தடம் – ஒற்றடம்
21. ஒம்பது – ஒன்பது
22. கறம் – கரம்
23. கயறு, கவுறு – கயிறு
24. அருணைக் கயிறு – அரைஞாண்கயிறு
25. புஞ்சை – புன்செய்
26. பாவக்காய் – பாகற்காய்
27. தவக்களை – தவளை
28. கொரங்கு – குரங்கு
29. முயற்சித்தார் – முயன்றார்
30. பேரன் – பெயரன்
31. வேர்வை – வியர்வை
32. இடதுபுறம் – இடப்புறம்
33. உசிரு – உயிர்
34. எம்பது – எண்பது
35. ஒருவள் – ஒருத்தி