
மரூஉ
• நாம் எல்லாச் சொற்களையும் எல்லா இடங்களிலும் முழுமையான வடிவத்தில் பயன்படுத்துவது இல்லை.
• தஞ்சாவூர் என்னும் பெயரைத் தஞ்சை என்றும், திருநெல்வேலி என்னும் பெயரை நெல்லை எனவும் வழங்குகிறோம்.
• இவ்வாறு இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள் மரூஉ எனப்படும்.
• (எ.கா.)- கோவை, குடந்தை, எந்தை, போது, சோணாடு
நீதிமன்றத்தில் தொடுக்கும் வழக்கு வேறு; இலக்கண வழக்கு என்பது வேறு. நம் முன்னோர் எந்தப்பொருளை எந்தச்சொல்லால் வழங்கி வந்தனரோ, அதனை அப்படியே நாமும் வழங்கி வருவதற்கு வழக்கு என்று பெயர். இஃது 1) இயல்பு வழக்கு, 2) தகுதி வழக்கு என இருவகைப்படும்.
* ஒரு பொருளைச் சுட்டுவதற்கு, எந்தச் சொல் இயல்பாக வருகிறதோ, அந்தச் சொல்லாலேயே வழங்குவதை இயல்பு வழக்கு என்பர். இதனை 1) இலக்கணமுடையது, 2) இலக்கணப்போலி, 3) மரூஉ என மூவகையாகக் கூறுவர்.
• தஞ்சாவூர், கோயமுத்தூர் இவ்வூர்களை எவ்வாறு சுருக்கி அழைக்கிறோம் ?
= தஞ்சை, கோவை.
• தஞ்சாவூர், கோயமுத்தூர் இவை தஞ்சை, கோவை எனச் சிதைந்து வந்துள்ளதால், இவற்றை மரூஉ என அழைக்கிறோம்.
1. ஆற்றூர் – ஆத்தூர்
2. சேலையூர் – சேலம்
3. கருவூர்-கரூர்
4. கொடைக்கானல் – கோடை
5. மணப்பாறை – மணவை
6. விருதுநகர் – விருதை
7. பரமக்குடி – பரம்பை
8. சங்கரன்கோவில் – சங்கை
9. அம்பாசமுத்திரம் – அம்பை
10. அறந்தாங்கி – அறந்தை
11. அலங்காநல்லூர் – அலங்கை
12. சிங்களாந்தபுரம் – சிங்கை
13. சிங்காநல்லூர் – சிங்கை
14. மயிலாடுதுறை – மயூரம்
15. சேந்தமங்கலம் – சேந்தை
16. சோழிங்கநல்லூர் – சோளிங்கர்
17. திருவண்ணாமலை – அருணை
18.கருந்தட்டைக்குடி – கரந்தை
19. கரிவலம் வந்தநல்லூர் – கருவை
20. இராமநாதபுரம் – முகவை
21. நாகர்கோவில் – நாஞ்சி
22. மயிலாடுதுறை – மாயூரம்
23. திருத்தணி – தணிகை
24. வேதாரண்யம் – வேதை
25. திருச்செந்தூர் – செந்தூர் / திருச்சீரலைவாய் / அலைவாய்
26. தர்மபுரி -தகடூர்
27. உசிலம்பட்டி – உசிலை
28. காஞ்சிபுரம் – காஞ்சி
29. பாளையங்கோட்டை – பாளை
30. ஸ்ரீவைகுண்டம் – ஸ்ரீவை
31. ஸ்ரீவில்லிபுத்தூர் – ஸ்ரீவி
32. அருப்புக்கோட்டை -அருவை
33. சிதம்பரம் – தில்லை
சேதுராயன்புத்தூர் – சேராத்து
34. திருக்குருகூர்(ஆழ்வார் 35. திருநகரி)-குருகை
36. உறையூர்-உறந்தை
37. திருவாரூர் – ஆரூர்
38. மயிலாப்பூர் – மயிலை
39. வண்ணாரப்பேட்டை – வண்ணை
40. பூவிருந்தவல்லி – பூந்தமல்லி
41. சைதாப்பேட்டை – சைதை
42. வானவன் மாதேவி – மானாம் பதி
43. மன்னார்குடி – மன்னை
44. மன்னார்குடி – மண்ணை
45. நாகப்பட்டினம் – நாகை
46. புதுக்கோட்டை – புதுகை
47. புதுக்கோட்டை – புதுமை
48. புதுச்சேரி – புதுவை
கும்பகோணம் – 49. குடந்தை
50. திருச்சிராப்பள்ளி – திருச்சி
51. சோழநாடு – சோணாடு
52. நாகப்பட்டினம் – நாகை
53. உதகமண்டலம் – ஊட்டி
54. உதகமண்டலம் – உதகை
55. பைம்பொழில் – பம்புளி
56. கோவன்புத்தூர் – கோயம்புத்தூர்
57. கோயம்புத்தூர் – கோவை
58. தேவகோட்டை – தேவோட்டை
59. திருநெல்வேலி – நெல்லை
60. செங்கற்பட்டு – செங்கை
61. தஞ்சை – தஞ்சாவூர்
62. திருநின்றவூர் – தின்னனூர்