உவமைத் தொடரின் பொருளறிதல் – இப்பகுதி வினாக்கள் உவமைகள் கொடுக்கப்பட்டு அந்த உவமையால் விளக்கப்டும் பொருளை கண்டறியுமாறு கேள்விகள் கேட்கப்படும்.
| தாமரை இலை நீர்போல | பட்டும் படாமல் இருத்தல்/ஈடுபாடும் இல்லாமலும் இருத்தல். |
| மழைமுகம் காணாப் பயிர்போல | வறட்சி வாட்டம் - துன்பம் |
| கண்ணினைக் காக்கும் இமை போல | பாதுகாப்பு |
| சிலை மேல் எழுத்து போல | நிலைத்து நிற்கும் |
| கிணற்றுத்தவளைபோல | உலகம் தெரியாமல் இருப்பது/அறியாமை |
| எலியும் பூனையும் போல | எதிரிகள்/பகைவர்கள் |
| அச்சாணி இல்லாத தேர் போல | சரியான வழிகாட்டி |
| பசுமரத்தாணி போல | எளிதாக |
| மடைதிறந்த வெள்ளம் போல | வேகமாக |
| அடியற்ற மரம் போல | வலுவிழந்து |
| கல்மேல் எழுத்து போல | அழியாமல் |
| நகமும் சதையும் போல | இணை பிரியாமை |
| அடுத்தது காட்டும் பளிங்கு போல | வெளிப்படுத்த |
| இலவு காத்த கிளி போல | ஏமாற்றம் |
| அலை ஓய்ந்த கடல் போல | அமைதி |
| இஞ்சி தின்ற குரங்கு போல | விழித்தல் |
| கயிறற்ற பட்டம் போல | தவித்தல், வேதனை |
| அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல | பொறுமை |
| நன்பால் கலந்தீமையால் திரிதல் போல் | கெடுதல் |
| மரப்பாவை நாணால் உயிர் மருட்டல் போல | மயங்குதல் |
| அடுத்தது காட்டும் பளிங்கு போல் | வெளிப்படுத்தல் |
| அத்தி பூத்தாற்போல | அரிய செயல் |
| அயடிற்ற மரம்போல் | வீழ்தல் |
| இலவு காத்த கிளி போல | ஏமாற்றம் |
| உடலும் உயிரும் போல | ஒற்றுமை, நெருக்கம் |
| கல்மடை திறந்தாற்போல | வெளியேறுதல் |
| பகலவனைக் கண்ட பணி போல | நீங்குதல் |
| உள்ளங்கை நெல்லிக்கனி போல | தெளிவு |
| தாமரையிலைத் தண்ணீர் போல | பற்றின்மை |
| பேடிகை வாளான்மை போலக்கெடும் | முயற்சின்மை |
| ஒற்கத்தின் ஊற்றாம் துணை போல | ஊன்றுகோல் |
| பொருபுலி புலியோடு சிலைத்த போல | எதிரெதிரே நின்று போரிடல் |
| கடலில் கரைத்த காயம் போல் | பயனற்றது |
| கொடுக்கும் தேளாய்க் கொட்டுவதேன் | வருத்தம் |
| இடியோசை கேட்ட நாகம் போல | நடுக்கம் |
| செந்தமிழும் சுவையும் போல | ஒற்றுமை |
| தாயைக் கண்ட சேயைப் போல | இன்பம், அதிக மகிழ்ச்சி |
| நகமும் சதையும் போல | இணை பிரியாமை |
| மழை காணாப் பயிர் போல | வாடுதல் |
| வேலியே பயிரை மேய்ந்தது பேல | நயவஞ்சம் |
| அன்றலர்ந்த மலர் போல | புத்துணர்வு |
| அனலில் விழுந்த புழுப்போல் | வேதனை |
| கண்கட்டு வித்தை போல | மாயத்திரை |
| பத்தரை மாற்றுத்தங்கம் போல | பெருமை |
| நாயும் பூனையும் போல | பகை |
| அலை ஓய்ந்த கடல் போல | அமைதி |
| பசுமரத்தாணி போல் | எளிதாகப் பதிதல் |
| குன்றின் மேலிட்ட விளக்கு போல | பயனுடைமை / பயன்/ வெளிச்சம் |
| கனியிருப்பக் காய் கவரந்தது போல | அறியாமை, தேவையற்ற செயல் |
| இலைமறைக் காய் போல் | வெளிப்படுதல் |
| ஆலையில் அகப்பட்ட துரும்பு போல் | துன்பம் |
| குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல | நாசம் |
| செவிடன் காதில் ஊதிய சங்குபோல் | பயனின்மை |
| செந்தமிழும் சுவையும் பேல | ஒற்றுமை |
| ஞாயிறு கண்ட தாமரை போல | மகிழ்ச்சி |
| நீர்மேல் எழுத்து போல | நிலையற்றது |
| பழம் நழுவி பாலில் விழந்தது போல | இன்பமிகுதி |
| வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல | வருத்தம் |
| அனலிற் பட்ட மெழுகுபோல | துன்பம் கண்டு உருகுதல் |
| குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டு வருவது போல் | குறும்புகளில் ஈடுபடுவது |
| பொன்மலர் மணம் பெற்றது போல் | பொருட்செல்வர் அறிவு செல்வத்தைக் தேடிக் கொள்வது |
| உமி குற்றிக் கை சலித்தது போல் | வருத்தம் |
| கண்ணிலாதான் கண் பெற்று இழந்தது போல | தவிப்பு |
| கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல | அத்துமீறல் |
| அச்சில் வார்த்தாற்போல | ஒரே சீராக |
| அவலை நினைத்து உரலை இடித்தாற்போல | கவனம் |
| ஆப்பறைந்த மரம் போல | உறுதி |
| அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் போல் | ஏமாற்றுதல் |
| அரை கிணறு தாண்டியவன் போல | ஆபத்து |
| ஆப்பசைத்த குரங்கு போல | சிக்குதல் |
| ஆழம் தெரியாமல் காலை விட்டது போல் | திட்டமிடாமை |
| இஞ்சி தின்ற குரங்கு போல் | விழித்தல் |
| இடி விருந்த மரம் போல் | வேதனை |
| இரும்பைக் கண்ட காந்தம் போல் | கவர்ச்சி |
| உடும்புப் பிடி போல | பிடிப்பு |
| உமையும், சிவனும் போல் | நட்பு, நெருக்கம் |
| உச்சந்தலையில் ஆணி அறைந்தது போல் | உறுதி |
| ஊமை கண்ட கனவு போல | தவிப்பு, கூற இயலாமை |
| எள்ளில் எண்ணெய் போல் | ஒளிந்திருத்தல், மறைவு |
| எட்டாப்பழம் புளித்தது போல் | ஏமாற்றம் |
| ஏழை பெற்ற செல்வம் போல் | மகிழ்ச்சி |
| ஒண்ட வந்த பிடாரி வளர்ப்பு பிடாரியை ஓட்டினாற்போல் | விரட்டுதல் |
| கண் கெட்டபின் சூரிய நமஸ்கராம் போல | காலம் தாமதித்து உணர்தல், வருமுன் காவாமை |
| கயிறற்ற பட்டம் போன்று | தவித்தல், வேதனை |
| கடைத்தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்தது | பிறரை ஏமாற்றுதல் |
| கண்ணைக் கட்டி காட்டில் விட்டது | கலக்கம், வருத்தம் |
| கானமயிலாட அது கண்டு ஆடம் வான்கோழி போல | தாழ்வு, உயர்வின்மை |
| குடத்தில் இட்ட விளக்கு பேல | இகழ்ச்சி, அடக்கம் |
| சிதறிய முத்து பேல | பயனின்மை |
| காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் மேய்ந்தாற்போல | வேகம் |
| சீரிய நாகம் போல் | கோபம் |
| செல்லரித்த ஒலைபோல் | பயனின்மை |
| நீரும் நெருப்பும் போல | விலகுதல் |
| பாம்பின் வாய்த்தேரை போல | மீளாமை |
| முக்காலம் உணர்ந்த முனிவர் போல | அறிதல் |
| பாய்மரம் சாய்ந்தது போல | விழுதல் |
| மரமேற்றின வண்டி போல் | சுமை |
| பால் மணம் ஆறாத குழந்தை போல | வெகுளி |
| புளியம் பழமும் தோடும் போல | ஒற்றுமை |
| புற்றீசல் போல | பெருகுதல் |
| மலரும் மணமும் போல | ஒற்றுமை |
| வேம்பு அரசும் போல | ஒற்றுமை |
| மேகம் கண்ட மணில் போல | மகிழ்ச்சி, ஆனந்தம் |
| காட்டுத்தீ போல | வேகமாக பரவுதல் |
| பற்று மரமில்லாக் கொடி போல | ஆதரவின்மை, துன்பம் |
| கோலை எடுத்தால் குரங்கு போல் | பயம் |
| சர்க்கரைப் பந்தலில் தேன் பொழிந்தாற்போல | இன்பம் |
| சாயம் போன சேலை | மதிப்பின்மை |
| சித்திரப் புதுமை போல | அழகு |
| சிவபூஜையில் கரடி போல | விருப்பமின்மை, தேவையற்ற வரவு |
| சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தல் போல | வேண்டாத வேலை, கேடு செய்தல் |
| சேற்றில் பிறந்த செந்தாமரை போல் | உயர்வு, மேன்மை |
| சொன்னது சொல்லும் கிளிப்பிள்ளை போல | திரும்பச் செய்தல் அறிவின்மை |
| திருடனைத் தேள் கொட்டியது போல | சொல் முடியாத வேதனை |
| தோன்றி மறையும் வானவில்லைப் போல் | நிலையற்ற, நிலையாமை |
| நத்தைக்குள் முத்துப்போல் | உயர்வு, மேன்மை |
| நாண் அறுத்த வில் போல | பயனற்றது |
| தொட்டனைத் தூறம் மணற்கேணி போல் | அறிவு |
| நீருக்குள் பாசி போல் | நட்பு |
| பசுத்தோல் போர்த்தி புலி போல் | நயவஞ்சகம், ஏமாற்றுதல் |
| தாயைப் போல பிள்ளை | தொடர்பு |