இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.
இரண்டு வினைச்சொற்களின் வேறுபாடு அறிதல்
1. வினைச்சொல்:
ஒரு தொழிலை உணர்த்தி வரும் சொல் வினைச்சொல் எனப்படும்.
2. வினைச்சொல்லின் பண்புகள்:
• காலம் காட்டும், வேற்றுமை ஏற்காது.
• திணை, பால், எண், இடங்களை உணர்த்தி வரும்
இரு வினைகளின் வேறுபாடு சொற்கள் சில எடுத்துக்காட்டு:-
1. அடங்கு – அடக்கு
✓ஆசிரியர் அடக்க, மாணவர்கள் அடங்கினர்
2. அறிவது – அரிது
✓ இலக்கணத்தை அறிவது மிகவும் அரிது
3. நிறைந்த – நிறைத்த
✓ பழக்கலவை நிறைந்த ஜாடியில் தண்ணீரை நிறைத்தனர்
4. விளித்து – விழித்து
✓அம்மா விளித்ததும், கண் விழித்தான்
5. குவிந்து – குவித்து
✓ பள்ளியில் குவிந்த குப்பைகளை அள்ளி வண்டியில் குவித்து வைத்தனர்
6.பரந்து – பறந்து
✓ விதைகள் பரந்து கிடப்பதை உண்ண பறவைகள் பறந்து வந்தன.
7. மாறு – மாற்று
✓ நேர்மையானவனாக மாறு, மற்றவரையும் மாற்று.
8. உண்ணு – உன்னு
✓ உணவை உண்ணும்போது உழவர்களை உன்னுதல் வேண்டும்.
9. கலைத்தல் – களைத்தல்
✓ மாணவர்கள் கலைத்த படங்களை ஒட்டி களைத்துப் போயினர்.
10. பெரு – பெரு
✓ பெருமை மிகுந்த செயல்களை செய்வதால், மதிப்புபெறுகின்றனர்.
11. உரி – உறி
✓ கிழங்கை தோல் உரித்து தூக்கி (உறித்து) போட்டனர்
12. சீரிய – சீறிய
✓ சீரிய (உயர்ந்த) பெருமை வாய்ந்த பாண்டிய மன்னனை சீறிய (கோபம்) கண்ணகி.
13. ஈந்தாள் – ஈன்றாள்
✓ தன் உயிரைக் கொடுத்து (ஈந்து) பிள்ளையை பெற்றெடுத்தாள் (ஈன்றாள்).
14. உணர்ந்த – உணர்த்தி
✓ கல்வியின் சிறப்பை உணர்ந்த மாணவன், சக மாணவர்களுக்கும் உணர்த்தி சென்றான்
15. பொருந்து – பொருத்து
✓ படங்களை பொருத்தி சரியாக பொருந்தியுள்ளதா எனப் பார்த்தான்
16. கலைத்தல் – களைத்தல்
✓ அழித்தல் – சோர்தல்
17. பணிந்து – பணித்து
✓ அடங்கி – கட்டளை
✓ தலைவர் தொண்டர்களை வேலை செய்ய பணித்தார். தொண்டர்கள் தலைவருக்குப் பணிந்தனர்.
18. குவிந்து – குவித்து
✓ அமைச்சர் பதவியேற்றவுடன் பாராட்டுகள் குவிந்தன. ஆதரவாளர்கள் பரிசுப் பொருட்களை குவித்தனர்
19. விலை விளை
✓ பொருளின் மதிப்பு – உண்டாக்குதல்
20. பரி – பறி
✓ பாரி பழங்களை பறித்து கொண்டு பரியில் சென்றான்