கி.வா.ஜகந்நாதன்

கி.வா.ஜகந்நாதன் வயலும் வாழ்வும் ஓடை எல்லாம் தாண்டிப்போயி –ஏலேலங்கிடி ஏலேலோ ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து –ஏலேலங்கிடி ஏலேலோ சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி –ஏலேலங்கிடி ஏலேலோசேத்துக்குள்ளே இறங்குறாங்க –ஏலேலங்கிடி ஏலேலோ  நாத்தெல்லாம் பிடுங்கையிலே –ஏலேலங்கிடி ஏலேலோ நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க –ஏலேலங்கிடி ஏலேலோஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் –ஏலேலங்கிடி ஏலேலோ ஓடியோடி நட்டோமையா –ஏலேலங்கிடி ஏலேலோ மணிபோலப் பால்பிடித்து –ஏலேலங்கிடி ஏலேலோ மனதையெல்லாம் மயக்குதம்மா –ஏலேலங்கிடி ஏலேலோ அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் –ஏலேலங்கிடி ஏலேலோ ஆளுபணம் கொடுத்துவாரான் –ஏலேலங்கிடி ஏலேலோ சும்மாடும் தேர்ந்தெடுத்து –ஏலேலங்கிடி ஏலேலோ சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் –ஏலேலங்கிடி ஏலேலோ கிழக்கத்தி மாடெல்லாம் … Read more

உருத்திரங் கண்ணனார்

கடியலூர் உருத்திரங் கண்ணனார் கலங்கரை விளக்கம் வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி விண்பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி உரவுநீர் அழுவத்து ஒடுகலம் கரையும் துறை … ….– கடியலூர் உருத்திரங் கண்ணனார் 1. கடியலூர் உருத்திரங் கண்ணனார் சங்ககாலப் புலவர். 2. ஊர் – கடியலூர். 3. பத்துப்பாட்டில் உள்ள பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியவர் – கடியலூர் உருத்திரங் கண்ணனார். 4. பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன்–  தொண்டைமான் இளந்திரையன். 5. வள்ளல் ஒருவரிடம் பரிசு … Read more

தமிழ் ஒளி

கவிஞர் தமிழ் ஒளி பட்ட மரம் மொட்டைக் கிளையொடு நின்று தினம்பெரு  மூச்சு விடும்மரமே!வெட்டப் படும் ஒரு நாள்வரு மென்று  விசனம் அடைந்தனையோ?குந்த நிழல்தரக் கந்த மலர்தரக்  கூரை விரித்தஇலை !வெந்து கருகிட இந்த நிறம்வர  வெம்பிக் குமைந்தனையோ?கட்டை யெனும்பெயர் உற்றுக் கொடுந்துயர்  பட்டுக் கருகினையே!பட்டை யெனும்உடை இற்றுக் கிழிந்தெழில்  முற்றும் இழந்தனையே! காலம் எனும்புயல் சீறி எதிர்க்கக்  கலங்கும் ஒருமனிதன்ஒலமி டக்கரம் நீட்டிய போல்இடர்  எய்தி உழன்றனையே!பாடும் பறவைகள் கூடி உனக்கொரு  பாடல் புனைந்ததுவும் மூடு பனித்திரை யூடு புவிக்கொரு  மோகங் கொடுத்ததுவும்ஆடுங் கிளைமிசை ஏறிச் சிறுவர்  குதிரை விடுத்ததுவும்ஏடு தருங்கதை யாக முடிந்தன!  … Read more

முடியரசன்

முடியரசன் நானிலம் படைத்தவன்  கல்லெடுத்து முள்ளெடுத்துக் காட்டுப் பெருவெளியை மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளப்படுத்தி ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற பேராக்கி வாழ்ந்த பெருமை அவன்பெற்றான், மாநிலத்தில் முல்லை மருதம் குறிஞ்சி நெய்தல் நானிலத்தைக் கண்டபெரும் நாகரிக மாந்தன்அவன், ஆழக் கடல்கடந்தான் அஞ்சும் சமர்கடந்தான் சூழும் பனிமலையைச் சுற்றிக் கொடிபொறித்தான் முக்குளித்தான் ஆழிக்குள் முத்தெடுத்தான் தோணிக்குள் எக்களிப்பு மீதூர ஏலம் மிளகுமுதற், பண்டங்கள் ஏற்றிப் பயன்நல்கும் வாணிகத்தால் கண்டங்கள் சுற்றிக் கலமேறி வந்தவன்தான், அஞ்சாமை மிக்கவன்தான் ஆனாலும் சான்றோர்கள் அஞ்சுவதை அஞ்சி அகற்றி விலக்கிடுவான்  – முடியரசன் யார் கவிஞன்?காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்;     … Read more

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் துன்பம் வெல்லும் கல்வி ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே நாட்டின் நெறிதவறி நடந்து விடாதே – நம் நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே மூத்தோர் சொல் வார்த்தைகளை மீறக் கூடாது – பண்புமுறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாதுமாற்றார் கைப்பொருளை நம்பி வாழக் கூடாது – தன்மானமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேணும் – நீசோம்பலைக் கொல்லும் திறன் பெற்றிட வேணும் வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட … Read more

வேலுநாச்சியார்

வேலுநாச்சியார் 1. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் – வேலுநாச்சியார். 2. கற்ற மொழிகள் – தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது 3. கற்ற கலைகள் – சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி. 4. சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தவர் – வேலுநாச்சியார். 5. ஆங்கிலேயர் 1772 ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர் வீரமரணமடைந்தார். 6. … Read more

தாராபாரதி

தாராபாரதி  பாரதம் அன்றைய நாற்றங்கால்  புதுமைகள் செய்த தேசமிது பூமியின் கிழக்கு வாசலிது! தெய்வ வள்ளுவன் நெய்த குறள்தான் தேசம் உடுத்திய நூலாடை! மெய்களைப் போற்றிய இந்தியத் தாய்க்குமெய்யுணர்வு என்கிற மேலாடை! காளி தாசனின் தேனிசைப் பாடல்கள் காவிரிக் கரையில் எதிரொலிக்க கம்பனின் அமுதக் கவிதை களுக்குக் கங்கை அலைகள் இசையமைக்க கன்னிக் குமரியின் கூந்த லுக்காகக் காஷ்மீர்த் தோட்டம் பூத்தொடுக்கும்! மேற்கு மலைகள் நதிகளை அனுப்பிக் கிழக்குக் கரையின் நலம்கேட்கும்! *புல்வெளி யெல்லாம் பூக்கா டாகிப் புன்னகை செய்த பொற்காலம்! கல்லைக் கூட காவிய மாக்கிக் கட்டி நிறுத்திய கலைக்கூடம்! அன்னை நாட்டின் அமுத சுரபியில் அன்னிய … Read more

காயிதே மில்லத்

காயிதே மில்லத் 1. கண்ணியமிகு தலைவர் என்னும் அடைமொழியால் அழைக்கப்படுபவர் – காயிதே மில்லத். 2. இயற்பெயர் – மும்மது இசுமாயில். 3. 'காயிதே மில்லத்' என்னும் அரபுச் சொல்லுக்கு பொருள் – சமூகதாய வழிகாட்டி. 4. "தமிழக அரசில் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்" என்று கூறியவர் – அறிஞர் அண்ணா. 5. "இப்படிப்பட்ட தலைவர் கிடைபதே அரிது அவர் நல்ல உத்தமமான மனிதர்" 6. காயிதே … Read more

கண்ணதாசன்

கண்ணதாசன்  காலக்கணிதம்  கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக! செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்; பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்! ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்! உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்; இல்லா … Read more

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. மக்கள் பணியையே இறைப் பணியாக எண்ணித்தம் வாழ்நாள் முழுவதும் தொண்டு செய்தவர் – த.கு.அ 2.  குன்றக்குடி திருமடத்தின் தலைவராக விளங்கிய இவர் தமது பேச்சாலும் எழுத்தாலும் இறைத்தொண்டும் சமூகத் தொண்டும் இலக்கியத் தொண்டும் ஆற்றியவர். 3. திருகுறள் நெறியைப் பரப்புவதை தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர் –  த.கு.அ 4. இயற்றிய நூல்கள்  நாயன்மார் அடிச்சுவட்டில் குறட்செல்வம் ஆலயங்கள் சமூதாய மையங்கள்  5. நடத்திய இதழ்கள்  அருளோசை  அறிக அறிவியல் Useful Links • … Read more