
வேலுநாச்சியார் 1. இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் – வேலுநாச்சியார். 2. கற்ற மொழிகள் – தமிழ் மட்டும் அல்லாமல் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது 3. கற்ற கலைகள் – சிலம்பம், குதிரையேற்றம், வாட்போர், விற்பயிற்சி. 4. சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்தவர் – வேலுநாச்சியார். 5. ஆங்கிலேயர் 1772 ஆம் ஆண்டு சிவகங்கைச் சீமையின்மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர் வீரமரணமடைந்தார். 6. சிவகங்கைச் சீமையின்மீது ஆங்கிலேயர்கள் படையெடுக்கப்பட்ட ஆண்டு – 1772 7. சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் கொல்லப்பட்ட ஆண்டு – 1772. 8. முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட இடம் – காளையார்கோவில். 9. வேலுநாச்சியார் யாருடைய உதவியை நாடினார் – திண்டுக்கல் கோபால நாயக்கர். 10. 8 ஆண்டுகளுக்கு பின் திண்டுக்கல் கோட்டையில். ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 11. வேலுநாச்சியார் எங்கு தங்கி ஒரு படையைத் திரட்டிப் பயிற்சி அளித்தார் – திண்டுக்கல் கோட்டையில். 12. வேலுநாச்சியார் அமைச்சர் – தாண்டவராயர். 13. வேலுநாச்சியார் தளபதிகள் – பெரிய மருது, சின்ன மருது. 14. "நாம் சிவகங்கையை இழந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன" என்றார் – வேலுநாச்சியார். 15. "கவலைப்படாதீர்கள் அரசியாரே! நாம் சிவகங்கையை மீட்கும் நாள் நெருங்கிவிட்டது" என்றார் – தாண்டவராயர். 16. "அந்த இனிய நாளைத்தான் நானும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்" என்றார் – வேலுநாச்சியார். 17. வேலுநாச்சியாருக்கு படைகள் அனுப்பி உதவியவர் – ஹைதர் அலி (500 குதிரை படைகள்). 18. வேலுநாச்சியார் அலியிடம் உருது மொழி யில் பேசினார். 19. "மைசூரிலிருந்து ஐதர்அலி அனுப்பிய படை வந்துவிட்டது என நினைக்கிறேன்" என்றார் – வேலுநாச்சியார். 20. "ஐதர்அலி உறுதியாகப் படையை அனுப்புவார் என்று எனக்கு முன்பே தெரியும் அரசியாரே!" என்றார் – தாண்டவராயர். 21. "எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?" "நாம் இருவரும் ஐதர்அலியைச் சந்திக்க மைசூர் சென்றோம் அல்லவா? அப்போது தாங்கள் அவரிடம் உருதுமொழியில் பேசினீர்கள். அப்போது அவர் முகத்தில் பெரிய மகிழ்ச்சி தோன்றியதை நான் கண்டேன்" என்றார் – தாண்டவராயர். 22. "நம் அரசியாரின் பன்மொழி அறிவு நமக்குப் பெரிய நன்மையைத் தந்திருக்கிறது" என்றார் – சின்ன மருது. 23. "ஆம். நமது வீரர்களுடன் ஐதர்அலியின் ஐயாயிரம் குதிரைப்படை வீரர்களும் சேர்ந்து விட்டனர். ஆகவே. நாளை சிவகங்கையை மீட்கப் புறப்படலாம் அல்லவா?" என்று கேட்டார் – பெரிய மருது. 24. "என் கணவர் கொல்லப்பட்ட ஊர் காளையார்கோவில். எனவே, நாம் முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றுவோம், பிறகு சிவகங்கையை மீட்போம்" என்றார் – வேலுநாச்சியார். 25. ஆண்கள் படைப்பிரிவுக்கு தலைமை ஏற்றவர்கள் – மருது சகோதரர்கள். 26. பெண்கள் படைப்பிரிவுக்குத் தலைமை ஏற்றவர் – குயிலி. 27. காளையார்கோவிலில் வேலுநாச்சியாரின் படைக்கும் ஆங்கிலேயரின் படைக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேயரின் படை தோற்று ஓடியது. 28. "அரசியார் அவர்களே! காளையார்கோவில் நம் கைக்கு வந்து விட்டது. நாம் இப்போதே சிவகங்கைக் கோட்டையைத் தாக்கினால் ஆங்கிலேயரை விரட்டியடித்து விடலாம்" என்றார் – பெரிய மருது. 29. "அவசரம் வேண்டாம். இப்போது சிவகங்கைக் கோட்டைக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கும். வரும் விசயதசமித் திருநாள் அன்று கதவுகள் திறக்கப்படும். அப்போது நமது படைகள் உள்ளே நுழையலாம்" என்றார் – வேலுநாச்சியார். 30. "விசயதசமித் திருநாள் அன்றும் பெரிய காவல் இருக்குமே" என்றார் – சின்ன மருது. 31. "விசயதசமி நாளில் கோட்டைக்குள் செல்வதற்குப் பெண்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. நமது பெண்கள் படைப்பிரிவினர் கூடைகளில் பூக்கள், பழங்கள் ஆகியவற்றுடன் ஆயுதங்களையும் மறைத்துக் கொண்டு கோட்டைக்குள் செல்லட்டும். உள்ளே அவர்கள் தாக்குதலைத் தொடங்கியதும் நமது ஆண்கள் படைப்பிரிவினரும் கோட்டைக்குள் நுழைந்து தாக்கட்டும். ஆங்கிலேயரை விரட்டியடித்து விடலாம்" என்றார் – வேலுநாச்சியார். 32. ஆங்கிலேயர்களிடம் வேலுநாட்ச்சியாரைப் பற்றிக் கூறாமல் தனது உயிரை விட்டவள் – உடையால். 33. உடையாள் என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினார்களாம். அவர் மறுத்ததால் கொன்றுவிட்டார்களாம். அவருக்கு நாம் உரிய முறையில் சிறப்புச் செய்ய வேண்டும்" என்றார் – தாண்டவராயர். 34. "அவருக்கு ஒரு நடுகல் நடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே! அவரது பெருமையை எல்லோரும் அறிந்து கொள்ளட்டும்" என்றார் – வேலுநாச்சியார். 35. உடையால் நடுகல்லுக்கு தாலியை காணிக்கையாகச் செலுத்தி வணங்கியவர் – வேலுநாச்சியார். 36. அருகில் நின்ற வீரர்கள் "உடையாள் புகழ் ஓங்குக" என்று முழக்கமிட்டனர். 37. "அரசியாரே! நான் நமது பெண்கள் படைப்பிரிவுடன் மாறுவேடத்தில் உள்ளே செல்கிறேன். உள்ளே சென்றதும் அங்குள்ள ஆயுதக் கிடங்குக்கு எப்படியாவது தீ வைத்து விடுகிறேன். தீ எரிவது தெரிந்ததும் நம் படை உள்ளே நுழையட்டும்" என்று கூறினார் – குயிலி. 38. உடலில் தீ வைத்துக் கொண்டு ஆயுதக் கிடங்குக்குள் குதித்தவர் – குயிலி. 39. "குயிலி தம் உயிரைத் தந்து நம்நாட்டை மீட்டுக் கொடுத்திருக்கிறார். அவரது துணிவுக்கும் தியாகத்திற்கும் வீரத்திற்கும் தலைவணங்குகிறேன்" என்று உணர்ச்சிப் பெருக்கோடு கூறினார் – வேலுநாச்சியார். 40. வேலுநாச்சியாரின் காலம்- 1730 – 1796 41. வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு – 1780 42. ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் – வேலுநாச்சியார். 43. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி – வேலுநாச்சியார். |