
- பேச்சு வழக்கு என்பது வாய்வழி பேசுவது ஆகும்.
- எழுத்து வழக்கு என்பது சிந்தித்து எழுதுவது ஆகும்.
வட்டார வழக்கு | எழுத்து வழக்கு |
அனயம் | நிறைவானது |
எச்சௌந்தவன் | ஏழை எளியவன் |
கீழத்தார் | புன்செய்யின் ஒரு பகுதி |
கெராமுனுசு | கிராம நிர்வாக அலுவலர் |
கொடவாங்கள் | கொடுக்கல் வாங்கள் |
திருணை | திண்ணை |
தெகஞ்சத | முடிந்ததை |
பிஞ்சை | புன்செய் |
ரோசி | உரசுதல் |
வாந்தக்கமாக | இணக்கமாக |
வெதப்பெட்டி | விதைப்பெட்டி |
வெள்ளங்காட்டி | விடியற்காலை |
வேண்டாற | வேண்டாத |
திருகை | மாவு அரைக்கும் கம் |
குறுக்கம் | சிறிய நிலபரப்பு |
கடகம் | ஓலைப்பெட்டி |
பேச்சு வழக்கு | எழுத்து வழக்கு |
கோர்த்து | கோத்து |
சுவற்றில் | சுவரில் |
நாட்கள் | நாள்கள் |
மனதில் | மனத்தில் |
பதட்டம் | பதற்றம் |
சிலவு | செலவு |
அருகாமையில் | அருகில் |
பாம்புப்புத்து | பாம்புப்புற்று |
பட்டம் பறக்குது | பட்டம் பறக்கிறது |
தண்ணீர் குடிச்சான் | தண்ணீர் குடித்தான் |
பூனை ஓடுச்சு | பூனை ஓடியது |
அப்பளம் உடைஞ்சது | அப்பளம் உடைந்தது |
கை வலிச்சுது | கை வலித்தது |
வேகல | வேகவில்லை |
பெய்ஞ்சுது | பெய்தது |
எரியல் | எரியவில்லை |
புல்லு | புல் |
ஒசந்த | உயர்ந்த |
ஊறவச்சு | ஊறவைத்து |
தெறந்து | திறந்து |
எருவு | எரு |
தலகாணி | தலையணை |
வேர்வை | வியர்வை |
வூடு | வீடு |
வெல | வேலை |
தண்ணீ | தண்ணீர் |
வெளக்கு | விளக்கு |
ஊரணி | ஊருணி |
எண்ணை | எண்ணெய் |
ஒருவள் | ஒருத்தி |
ஒருக்கால் | ஒருகால் |
ஒண்டியாய் | ஒன்றியாய் |
கவுறு | கயிறு |
கார்த்தல் | காத்தல் |
கத்தாளை | கற்றாளை |
கோர்வை | கோவை |
சுவத்தில் | சுவரில் |
சேலை | சீலை |
சிறுவாடு | சிறுபாரு |
தண்ணீ | தண்ணீர் |
துடங்கு | தொடங்கு |
பயந்தாங்குள்ளி | பயங்கொள்ளி |
பசறு, பசரு | பயறு |
பேத்தல் | பிதற்றல் |
பிந்துக்குளி | பித்துக்கொளி |
மானவாரி | வானவாரி |
சிறங்கு | சிரங்கு |
வயிறாற | வயிறார |
வுடும்பு | உடும்பு |
சாப்டான் | சாப்பிட்டான் |
இந்தா | பிடித்துக்கொள் |
வாங்கியாந்த | வாங்கிவந்த |
கெளம்பு | புறப்படு |
செம்ம | செம்மை |
பார்த்தியா ? | பார்த்தாயா ? |
செல்லு | செல் |
செய்தியா | செய்தாயா |
கொடுத்தியா | கொடுத்தாயா |
×-×-×-×-×-×-× | ×-×-×-×-×-×-× |
வாங்கியாந்த | வாங்கிவந்தது |
செவ்வாக்கெழம | செவ்வாய்க்கிழமை |
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு., புரிஞ்சிக்கோ | இப்பொழுது எனக்குப் புரிந்துவிட்டது.நீயும் புரிந்துகொள் |
நிலத்தக் கௌறணும்டா அப்பதான் வகுறு நிறையும் | நிலத்தை உழுதால்தான் வயிறு நிறையும் |
அண்ணைக்கு அவனுக்குப் பணம் குடுத்து ஒதவியிருக்க வேண்டியதான. | அன்று அவனுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்க வேண்டியதுதான். |
வூட்டாண்ட வெளையாண்ட கொயந்தையை அப்பா எங்க இஸ்துகினு போனாரு. | வீட்டுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை அப்பா எங்கு அழைத்துக்கொண்டு போனார். |
புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது |
பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது. |
ரவைக்கு சித்தப்பன காவலுக்குப் போவ சொல் | இரவு சித்தப்பாவை காவலுக்குப் போகச் சொல். |
“தம்பீ? எங்க நிக்கிறே?” “நீங்க சொன்ன எடத்துலதாண்ணே ! எதிர்த்தாப்புல ஒரு டீ ஸ்டால் இருக்குது.” “அங்ஙனக்குள்ளயே டீ சாப்டுட்டு, பேப்பரப் படிச்சிட்டு இரு.. நா வெரசா வந்துருவேன்” “அண்ணே! சம்முவத்தையும் கூட்டிக்கிட்டு வாங்கண்ணே! அவனெய் பாத்தே ரொம்ப நாளாச்சு!” “அவம்பாட்டியோட வெளியூர் போயிருக்கான். உங்கூருக்கே அவனேக் கூட்டிக்கிட்டு வர்றேன்.” “ரொம்பச் சின்ன வயசுல பார்த்ததுண்ணே ! அப்ப அவனுக்கு மூணு வயசு இருக்கும்!” “இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்! சரி, போனை வையி. நாங கௌம்பிடேன்…” “சரிங்கண்ணே ” |
“தம்பி எங்கே நிற்கிறாய்?” “நீங்கள் சொன்ன இடத்தில்தான் அண்ணா ! எதிர்ப்புறத்தில் ஒரு தேநீர் கடை இருக்கிறது.” “அங்கேயே தேநீர் சாப்பிட்டுவிட்டு, செய்தித்தாள் படித்துக்கொண்டிரு. நான் விரைவாக வந்து விடுகிறேன்.” “அண்ணா! சண்முகத்தையும் கூட்டிக்கொண்டு வாருங்கள் அண்ணா! அவனைப் பார்த்து அதிக நாட்களாகிவிட்டன.” “அவன் பாட்டியுடன் வெளியூர் சென்றிருக்கிறான். உங்கள் ஊருக்கே அவனைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்.” “நிறைய நாளுக்கு முன்னால் சின்ன வயதில் பார்த்தது அண்ணா . அப்போது அவனுக்கு மூன்று வயது இருக்கும் ” “இப்போது உயரமாக வளர்ந்துவிட்டான். உனக்கு அடையாளமே தெரியாது. ஊருக்கு என்னுடன் வருவான். பார்த்துக்கொள். சரி. தொலைபேசியை வைத்துவிடு. நான் புறப்படுகிறேன்.” “சரி அண்ணா !” |