பெயரெச்சம் வகை அறிதல்

பெயரெச்சம் வகை அறிதல்

பெயரெச்சம் வகை அறிதல் 

    • பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை கொண்டு முடியும் எச்சவினைச்சொல் பெயரெச்சம் ஆகும்.

     • பெயரெச்சத்தைக் காலம் காட்டும் முறையின் அடிப்படையில், தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இரு வகைப்படுத்துவர்.


1. தெரிநிலைப் பெயரெச்சம்
  • காலத்தை வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும். 
  • பால் விகுதி காட்டும்.
  • இடைநிலை அல்லது விகுதியைக் கொண்டு பெயரெச்சம் காலம் காட்டும்.
  • அ, உம் ஆகிய இரண்டு விகுதிகள் தெரிநிலைப் பெயரெச்சத்தில் இடம்பெறுகின்றன.
(எ.கா)
இறந்தகாலப் பெயரெச்சம் படித்த மாணவன்.
('ட்' இறந்தகால இடைநிலை)
நிகழ்காலப் பெயரெச்சம் படிக்கின்ற மாணவன்.
('கின்று' நிகழ்கால இடைநிலை)
எதிர்காலப் பெயரெச்சம் படிக்கும் மாணவன்.
('உம் பெயரெச்ச விகுதி)


     இறந்தகாலத்தையும், நிகழ்காலத்தையும் இடைநிலைகள் உணர்த்துகின்றன. எதிர்காலத்தை விகுதி உணர்த்துகிறது.


2. குறிப்புப் பெயரெச்சம்


  •    பெயர் அடியாகப் பிறந்து, காலத்தைக் குறிப்பாக உணர்த்தும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.
  •      குறிப்புப் பெயரெச்சம் ‘அ’ என்னும் விகுதியைப் பெற்று வரும்.


(எ.கா)


   •  சிறிய பையன்
   •  புதிய பாடம்
   •  அழகிய கவிதை


இவை முறையே சிறுமை, புதுமை, அழகு ஆகிய பெயர்களின் அடியாகப் பிறந்தவை. நேற்றுச் சிறிய பையன், இன்று சிறிய பையன், நாளை சிறிய பையன் எனச் சூழ்நிலைக்கு ஏற்பக் குறிப்புப் பெயரெச்சம் காலத்தைக் குறிப்பாக உணர்த்தும்.