|
பல பொருள்
|
ஒரு சொல்
|
| கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம். | காடு |
| புணரி, ஆழி, சாகரம், சமுத்திரம், பெளவம், வேலை, முந்நீர், நீராழி, பெருநீர் | கடல் |
| கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் | கப்பல் |
| ஓர் எண் (6), இயற்கையாக இருகரைகளுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு, வழி, தணி | ஆறு |
| கயம், வேழம், களிறு, பிளிறு, களபம், மாதங்கம், கைம்மா, வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆனை, இபம், இரதி, குஞ்சரம், வல்விலங்கு, கரி, அஞ்சனம். | யானை |
| மணம், காவல், விரைவாக, கூர்மையான, வாசனை, காவல், கடி(த்தல்), சிறப்பு, களிப்பு, அச்சம் | கடி |
| உறு, தவ, நனி | மிகுதி |
| ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி | ஓவியம் |
| கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர் | ஓவியம் வரைபவர் |
| எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை | ஓவியக் கூடம் |
| இரக்கம், கருணை, தயவு, கிருபை, அபயம். |
அருள் |
| அகம், இல், இல்லம், உறையுள், கிருகம், மனை. | வீடு |
| ஞானம், மதி, உணர்வு, உரம், மேதை, விவேகம் | அறிவு |
| ஆகாரம், உண்டி, போஜனம், ஊன், அடிசில், தீனி. | உணவு |
| பங்கயம், கமலம், அம்புயம், முளரி, புண்டரிகம், சரோருகம், மரை, பூ, தாவுகின்ற மான். | தாமரை |
| திருமால், அரிதல், சிங்கம், வண்டு | அரி |
| விடம், ஒரு மரம், மழைநீர், அம்புக்கூடு | ஆலம் |
| கழுத்து, ஆபத்து, நிலப்பெரும் பிரிவு | கண்டம் |
| பாத்திரம்,கப்பல், ஆபரணம். | கலம் |
| அம்பு, அசையும்பொருள், பூமாலை | சரம் |
| பனை. நா, பூமி | தாலம் |
| அரசன், இடம், கணவன் | பதி |
| பூமி, கற்பாறை, பார்த்தல் | பார் |
| சங்கு, புற்று, வளைதல். | வளை |
| அழகு, நகை, வரிசை, அணிகலன், உடுத்து, அலங்காரம், ஆபரணம். ஒழுங்கு, படைப்பிரிவு, அணிதல், | அணி |
| உள்ளம், வீடு, இடம் | அகம் |
| கணை, மூங்கில், நீர், மேகம் | அம்பு |
| நாடகசாலை, சபை, போர்க்களம் | அரங்கம் |
| சோறு, ஒருவகைப் பறவை | அன்னம் |
| வீடு, மனம், உட்பகுதி | அகம் |
| ஒலி, பாம்பு | அரவம் |
| கடல் அலை, திரி | அலை |
| படுக்கை, தடுத்தல், தழுவு | அணை |
| நீங்கு, விளக்கு ஏற்றும் தானம் | அகல் |
| சொல், அடி, திரை, வீட்டின் பகுதி | அறை |
| கீழ்ப்பகுதி, பாதம், அடித்தல் | அடி |
| வல்லமை, திறமை | ஆற்றல் |
| மாலை, சந்தனம் | ஆரம் |
| ஒருவகை விலங்கு, ஆடுதல் | ஆடு |
| கண்ணாடி, தமிழ்மாதம், கூத்தாடி | ஆடி |
| எண், நதி, வழி |
ஆறு |
| உயிர், நீராவி, உயிரெழுத்து | ஆவி |
| ஆலமரம், நஞ்சு,கடல்,கலப்பை | ஆலம் |
| புகழ், இணங்கு, பண் | இசை |
| பூவிதழ், உதடு | இதழ் |
| தாக்கு, வானிடி, முழக்கம், உறுதிச்சொல். | இடி |
| கடவுள், நீர் இறைத்தல் | இறை |
| ஒலிசெய், உணவு | இரை |
| கொடு, பறவை, இரத்தல், அழிவு | ஈ |
| எரு, ஞானம், மதில், வலிமை | உரம் |
| எரு, ஞானம், மதில், வலிமை | உரம் |
| உடுத்து, விண்மீன், ஒடக்கோல், அகமி | உடு |
| சொல், தேய் | உரை |
| மேலுறை, வசி | உறை |
| ஆடை, ஒருவித இசைக்கருவி | உடுக்கை |
| பருத்தல், ஊதுகருவி, குளிர்க்காற்று | ஊதை |
| அன்னம், நீர்நாய், புளியமரம் | எகினம் |
| காளை, ஆண் சிங்கம், மேலே செல் | ஏறு |
| பாத்திரம், பன்றி | ஏனம் |
| நீர் இறைக்கும் கருவி, உயர்வு | ஏற்றம் |
| சந்தேகம், பிச்சை | ஐயம் |
| கூந்தல்,ஓதுபவன், ஓந்தி | ஓதி |
| ஆடை, கல்வி, கலைத்தல் | கலை |
| நீக்கு, பயிருக்குக் கேடான புல் | களை |
| காவல், காப்பு, கூர்மை, விரைவு | கடி |
| கரும்பு, மூங்கில் | கழை |
| பாவகை, சனி, துன்பம், வறுமை | கலி |
| யானை, சாட்சி, அடுப்புக்கரி | கரி |
| பாறைக்கல், படி, தோண்டு | கல் |
| குரங்கு, கவிஞர், பாடல் | கவி |
| தூண், நடுக்கம் | கம்பம் |
| கலம், நாவாய் | கப்பல் |
| காப்பாற்று, சோலை, காவடி, பூப்பெட்டி | கா |
| பெருங்காயம், புண், உடல், நிலைபேறு | காயம் |
| கருமை, மேகம் | கார் |
| மரக்கிளை, உறவு | கிளை |
| குடித்தல், குடும்பம், குடிப்பழக்கம் | குடி |
| குழந்தை, சேய், குழவிக்கல் | குழவி |
| கைக்குடை, தோண்டு | குடை |
| சேர், உடம்பு, பறவைக்கூடு | கூடு |
| கிரகம், புறம்கூறுதல் | கோள் |
| சங்கு, கூட்டம் | சங்கம் |
| வழி, வெப்பம் | சுரம் |
| படை, தானை, கிழங்கு | சேனை |
| கிள்ளி, வளவன், அபயன் |
சோழன் |
| பாதம், முயற்சி, காகிதம் | தாள் |
| அலை, வெற்றிலை | திரை |
| திங்கள், மாதம், கிழமை, மதி, பிறை, நிலவு, நிலா, அம்புலி | சந்திரன் |
| உயர்ந்த அழகு, செல்வம், மேன்மை, இலக்குமி, மரியாதை அடை. | திரு |
| அலை, விளக்குத் திரி | திரி |
| துண்டு செய், ஆடை | துணி |
| தைத்தல், மாதம் | தை |
| பெண், தைத்தல் | தையல் |
| சிரிப்பு, அணிகலன் | நகை |
| கயிறு, வெட்கம், வட்டத்தின் நடுவில் வரையும் கோடு | நாண் |
| விரும்பு, தேசம் | நாடு |
| பாம்பு, துத்தநாகம் | நாகம் |
| வாசி, படிக்கட்டு, அளக்கும் கருவி | படி |
| கல்விக்கூடம், படுக்கை, தொழுமிடம் | பள்ளி |
| பணிவு, அணிகலன் | பணி |
| உலகம், காண் | பார் |
| மேகம், பெருங்காற்று | புயல் |
| தவறு, உயிர் தப்புதல் | பிழை |
| பெண் யாணை, பிடித்துக்கொள் | பிடி |
| அறிவு, நிலா | மதி |
| சோம்பல், இற | மடி |
| வீரம், பாவம் | மறம் |
| திருமணம், கலத்தல் | மணம் |
| பெரிய, விலங்கு, மாமரம் | மா |
| பொழுது, தார் | மாலை |
| குற்றம், தீது | மாசு |
| தலை, செய்துமுடி, கட்டு | முடி |
| உண்மை, உடம்பு | மெய் |
| மலை, தீட்டு, எல்லை | வரை |
| வலிமை, நோவு | வலி |
| யானை, கோழி, கடல், சங்கு | வாரணம் |
| பதில், காளை | விடை |
| புலி, வேங்கைமரம் | வேங்கை |
| யானை, கரும்பு | வேழம் |
| ஞாயிறு, பகலவன், கதிரவன், ஆதவன், பரிதி, அருக்கன், வெய்யோன், அனலி, இரவி | சூரியன் |
| ஆகாயம், வான், விசும்பு, விண்ணகம், விண் | வானம் |
| தீ, அக்கினி, அழல்,தழல், கனல் | நெருப்பு |
| கவி, கவிதை, செய்யுள், பா, பாடல்,கீதம் | பாட்டு |
| ஏடு, நூல், இழை, பனுவல் | புத்தகம் |
| உலகம்,புவி,பார், வையகம், அகிலம், தரணி, குவலயம் | பூமி |
| துயில், உறக்கம், துஞ்சல், தூக்கம் | நித்திரை |
| தேகம், உடம்பு, சரீரம், மேனி, யாக்கை | உடல் |
| தொனி, சத்தம், அரவம், ஓசை, ஆரவாரம் | ஒலி |
| கதிரவன், வெளிச்சம், விளக்கு. | ஒளி |
| கோபம். சீற்றம், காய்தல், முனிதல் | சினம் |
| மனையாள், இல்லாள், தலைவி, கிழத்தி | மனைவி |
| மெய், சத்தியம், வாய்மை | உண்மை |
| சிரம், உச்சி | தலை |
| சர்ப்பம், அரவம், பணி | பாம்பு |
| மகவு, சேய், பிள்ளை, குழவி, சிசு. மழலை | குழந்தை |
| புன்னகை, நகைப்பு, முறுவல் | சிரிப்பு |
| மன்னன், வேந்தன், கோன், கோ | அரசன் |
| காடு, ஆரணியம், கானகம், அடவி | வனம் |
| ஆவல், விருப்பம், அவா | ஆசை |
| பழனம், கழனி, கமம் | வயல் |
| சமர், அமர், போர், யுத்தம் | சண்டை |
| அன்னம், சாதம், அடிசில், உணவு, ஊன், ஆகாரம், சாப்பாடு. | சோறு |
| குருதி, உதிரம், சோரி, கறை | இரத்தம் |
| அசுவம், துரகம், புரவி, மா,பரி | குதிரை |
| தண்ணீர், புனல், சலம், அப்பு | நீர் |
| அபராதம், குற்றம், தண்டம் | தண்டனை |
| எழில், வனப்பு, கவின், வடிவு, அணி | அழகு |
| இல்லம், மனை, அகம், உறையுள் | வீடு |
| சியம், கேசரி, மடங்கல், அரி | சிங்கம் |