சுட்டு எழுத்துகள் 6th to 12th Full Notes – Old and New Book

சுட்டு எழுத்துகள் 6th to 12th full notes tnpsc tamil

சுட்டு எழுத்துகள் – முழுத் தொகுப்பு

TNPSC போட்டித் தேர்வு வெற்றிக்காக 6 முதல் 12-ஆம் வகுப்பு Samacheer School Book பாடப்பகுதியின் சுட்டு எழுத்துகள் குறிப்புகள் இங்கே முறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இது உங்கள் Professional Online Preparation-க்கு உதவும்.

 

பாடக்குறிப்பு

அவன், இவள். அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துகளே காரணம் ஆகும்.

இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும். ஆனால், இன்று ‘உ’ என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.

1. அகச்சுட்டு

இவன், அவன், இது, அது – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தருவதில்லை. இவ்வாறு, சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும்.

 

2. புறச்சுட்டு

அவ்வானம், இம்மலை, இந்நூல் – இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது புறச்சுட்டு எனப்படும்.

 

3. அண்மைச்சுட்டு

இவன், இவர், இது, இவை, இம்மரம். இவ்வீடு இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இஃது அண்மைச்சுட்டு எனப்படும். அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘இ’ ஆகும்.

 

4. சேய்மைச்சுட்டு

அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இது சேய்மைச்சுட்டு எனப்படும். சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து ‘அ’ ஆகும்.

 

5. சுட்டுத்திரிபு

அம்மரம், இவ்வீடு ஆகியவை புறச்சுட்டுகள் என்பதை அறிவோம். இச்சொற்களை அந்த மரம். இந்த வீடு என்றும் வழங்குகிறோம்.

அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று (திரிந்து) அந்த, இந்த என வழங்குகின்றன.

இவ்வாறு, அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் அந்த, இந்த எனத் திரிந்து சுட்டுப் பொருளைத் தருவது சுட்டுத்திரிபு எனப்படும்.

 

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது.

1. என் வீடு _________ உள்ளது. (அது / அங்கே)

2. தம்பி ____________ வா. (இவர் / இங்கே)

 

Group 4 மாதிரி வினாக்கள் – சுட்டு எழுத்துகள்

1. “அவன்” – இச்சொல்லில் அமைந்துள்ள சுட்டு வகை எது?

அ) புறச்சுட்டு

ஆ) அகச்சுட்டு

இ) சுட்டுத் திரிபு

ஈ) அண்மைச் சுட்டு

உ) விடை தெரியவில்லை

 

2. சொல்லின் வெளியே நின்று சுட்டுப் பொருளை உணர்த்துவது எது?

அ) அகச்சுட்டு

ஆ) புறச்சுட்டு

இ) சுட்டுத் திரிபு

ஈ) இடைச்சுட்டு

உ) விடை தெரியவில்லை

 

3. “அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் உள்ளதைக் காட்டப் பயன்பட்ட சுட்டு எழுத்து எது?”

அ) அ

ஆ) இ

இ)

ஈ) எ

உ) விடை தெரியவில்லை

 

4. கீழ்க்காணும் சொற்களில் ‘சுட்டுத் திரிபு’ சொல்லினைத் தேர்ந்தெடுக்க:

அ) இவன்

ஆ) அம்மலை

இ) இப்பெட்டி

ஈ) அந்த மரம்

உ) விடை தெரியவில்லை

 

5. பொருத்தமற்ற இணையைக் கண்டறிக:

அ) அண்மைச் சுட்டு – இ

ஆ) சேய்மைச் சுட்டு – அ

இ) சுட்டுத் திரிபு – அந்த, இந்த

ஈ) அகச்சுட்டு – அவ்வீடு

உ) விடை தெரியவில்லை

இந்த Samacheer School Book தகவல்கள் உங்கள் Government Job கனவை அடைய உதவும் ஒரு சிறந்த Online Study Resource ஆகும்.

 

Useful Links

• Recent Posts

• TNPSC Group 4 Study Material Syllabus Wise and Prep Guide – New

• For Apply Exams and Notifications