
கண்ணதாசன்
காலக்கணிதம்
கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்! இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும் யானுமே அறிந்தவை; அறிக! செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்; பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்! பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்! ஆசை தருவன அனைத்தும் பற்றுவேன்! உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்; இல்லா யின்எமர் இல்லம் தட்டுவேன் வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன் வாய்ப்புறத் தேனை ஊர்ப்புறந் தருவேன்! பண்டோர் கம்பன், பாரதி, தாசன் சொல்லா தனசில சொல்லிட முனைவேன்! புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக் காது இகழ்ந்தால் என்மனம் இறந்து விடாது!
வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!
கல்லாய் மரமாய்க் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்லன்!
*மாற்றம் எனது மானிடத் தத்துவம்; மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!
கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க! உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;
நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!* – கண்ணதாசன் நதிவெள்ளம் காய்ந்து விட்டால்
நதிசெய்த குற்றம் இல்லை விதிசெய்த குற்றம் இன்றி
வேறு-யாரம்மா!
– கண்ணதாசன் |
மழைப்பொழிவு சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத் தத்துவமும் சொன்னார் - இந்தத் தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது தலைவர்கள் அவர்என்றார்! மாந்தரின் வாழ்வில் தேவைப் படுவது சாந்தம் தான்என்றார் - அது மண்ணையும் ஆளும் விண்ணையும் ஆளும் மகத்துவம் பார்என்றார்! சாதிகளாலும் பேதங்களாலும் தள்ளாடும் உலகம் - அது தர்மம் ஒன்றை நம்பிய பிறகே அடங்கிவிடும் கலகம்! ஓதும் பொருளாதாரம் தனிலும் உன்னத அறம்வேண்டும் - புவி உயர்வும் தாழ்வும் இல்லா தான வாழ்வினைப் பெறவேண்டும். இரக்கம் உடையோர் பேறுபெற்றோர் என இயேசுபிரான் சொன்னார் - அவர் இரக்கம் காட்டி இரக்கத்தைப் பெறுவர் இதுதான் பரிசுஎன்றார் *வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால் வாழ்க்கை பாலைவனம் - அவர் தூய மனத்தில் வாழ நினைத்தால் எல்லாம் சோலைவனம்! தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும் சண்டை சச்சரவு - தினம் தன்னாடு என்றும் பிறர்நாடு என்றும் பேசும் பொய்யுறவு! இமைக்கும் போதில் ஆயிரம் போட்டி எத்தனை வீண்கனவு - தினம் இவை இல்லாது அமைதிகள் செய்தால் இதயம் மலையளவு! – கண்ணதாசன்
கண்ணதாசன் கவியின்பம் செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் – வண்ணச் சந்தத்திலே கவிதைச் சரம்தொடுப்பேன் கதிர்வெடித்துப் பிழம்புவிழக் கடல்கொதித்துச் சூடேற்ற முதுமைமிகு நிலப்பரப்பில் முதற்பரப்பு தோன்றிவிட நதிவருமுன் மணல்வருமுன் நலம்வளர்த்த தமிழணங்கே! வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென் றாலும் வாடி நின்றால் ஒடுவ தில்லை எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும். பசுமை நிறைந்த நினைவுகளே ! பாடித் திரிந்த பறவைகளே! பழகிக் களித்த தோழர்களே! பறந்து செல்கின்றோம் - நாம் பறந்து செல்கின்றோம் ... ... ... எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ? முத்தான முத்தல்லவோ மிதந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ கடவுள்தந்த பொருளல்லவோ சின்னஞ்சிறு சிறகுகொண்ட சிங்காரச் சிட்டல்லவோ செம்மாதுளை பிளந்து சிரித்துவரும் சிரிப்பல்லவோ மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும் வல்லான் பொருள்குவிக்கும் தனியுடைமை - நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை. காளை மணியோசை; களத்துமணி நெல்லோசை வாழை இலையோசை; வஞ்சியர்கை வளையோசை தாழை மடலோசை; தாயர்தயிர் மத்தோசை கோழிக் குரலோசை; குழவியர்வாய்த் தேனோசை. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் -நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும். – கண்ணதாசன்
1. காலம் – 24.06.1927 – 17. 10.1981 2. பிறந்த ஊர் – சிறுகூடல்பட்டி (சிவகங்கை மாவட்டம்) 3. பெற்றோர் – சாத்தப்பன் விசாலாட்சி 4. இயற்பெயர் – முத்தையா 5. சிறப்பு பெயர் – கவியரசு 6. காலக்கணிதம் – கண்ணதாசன் கவிதைகள் 7. படைத்த நெடுங்கவிதை நூல்கள்
8. இயேசுகாவியம் என்னும் நூலை இயற்றியவர் – கண்ணதாசன். 9. படைத்த புதினங்கள்
10. ஆசிரியராக இருந்த இதழ்கள்
11. கம்பர் – அம்பிகாபதி வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் – இராசதண்டனை. 12. 1949 -ஆம் ஆண்டு "கலங்காதிரு மனமே" என்ற பாடலை எழுதி, திரைப்படப் பாடலாசிரியரானார். 13. திரையுலகிலும் இலக்கிய உலகிலும் சிறந்து விளங்கியவர் – கண்ணதாசன். 14. தன் திரைப்படப் பாடல்கள் வழியாக எளிய முறையில் மெய்யியலை மக்களிடையே கொண்டு சேர்த்தவர் யார்? கண்ணதாசன். 15. 'சேரமான் காதலி' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் – கண்ணதாசன். 16. "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை" – கண்ணதாசன். 17. இவர் தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும் சிறப்பிக்கப்பட்டிருந்தார். 18. 'விஞ்ஞாணி ' என்னும் கவிதை கண்ணதாசன் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. 19. "நிலமெல்லாம் வணங்கும் தோற்றம் நெருப்பினில் வீழ்ந்த திங்கே" 20. "முச்சங்கம் கூட்டி முதுபுலவர் தமைக் கூட்டி" |