ஒரு பொருள் தரும் பல சொற்கள்
இப்பகுதியில் 6th to 12th வரையிலனா அனைத்து ஒரு பொருள் தரும் பல சொற்கள் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

ஒரு பொருள்
|
பல சொற்கள்
|
காடு | கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம். |
கடல் | புணரி, ஆழி, சாகரம், சமுத்திரம், பெளவம், வேலை, முந்நீர், நீராழி, பெருநீர் |
கப்பல் | கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தோணி, தெப்பம், திமில், அம்பி, வங்கம், மிதவை, பஃறி, ஓடம் |
ஆறு | ஓர் எண் (6), இயற்கையாக இருகரைகளுக்கு இடையில் நீர் ஓடும் பரப்பு, வழி, தணி |
யானை | கயம், வேழம், களிறு, பிளிறு, களபம், மாதங்கம், கைம்மா, வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அனுபமை, ஆனை, இபம், இரதி, குஞ்சரம், வல்விலங்கு, கரி, அஞ்சனம். |
கடி | மணம், காவல், விரைவாக, கூர்மையான, வாசனை, காவல், கடி(த்தல்), சிறப்பு, களிப்பு, அச்சம் |
மிகுதி | உறு, தவ, நனி |
ஓவியம் | ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி |
ஓவியம் வரைபவர் | கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர், ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர் |
ஓவியக் கூடம் | எழுதெழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திரமண்டபம், சித்திர சபை |
அருள் | இரக்கம், கருணை, தயவு, கிருபை, அபயம். |
வீடு | அகம், இல், இல்லம், உறையுள், கிருகம், மனை. |
அறிவு | ஞானம், மதி, உணர்வு, உரம், மேதை, விவேகம் |
உணவு | ஆகாரம், உண்டி, போஜனம், ஊன், அடிசில், தீனி. |
தாமரை | பங்கயம், கமலம், அம்புயம், முளரி, புண்டரிகம், சரோருகம், மரை, பூ, தாவுகின்ற மான். |
அரி | திருமால், அரிதல், சிங்கம், வண்டு |
ஆலம் | விடம், ஒரு மரம், மழைநீர், அம்புக்கூடு |
கண்டம் | கழுத்து, ஆபத்து, நிலப்பெரும் பிரிவு |
கலம் | பாத்திரம்,கப்பல், ஆபரணம். |
சரம் | அம்பு, அசையும்பொருள், பூமாலை |
தாலம் | பனை, நா, பூமி |
பதி | அரசன், இடம், கணவன் |
பார் | பூமி, கற்பாறை, பார்த்தல் |
வளை | சங்கு, புற்று, வளைதல். |
அணி | அழகு, நகை, வரிசை, அணிகலன், உடுத்து, அலங்காரம், ஆபரணம். ஒழுங்கு, படைப்பிரிவு, அணிதல் |
அகம் | உள்ளம், வீடு, இடம் |
அம்பு | கணை, மூங்கில், நீர், மேகம் |
அரங்கம் | நாடகசாலை, சபை, போர்க்களம் |
அன்னம் | சோறு, ஒருவகைப் பறவை |
அகம் | வீடு, மனம், உட்பகுதி |
அரவம் | ஒலி, பாம்பு |
அலை | கடல் அலை, திரி |
அணை | படுக்கை, தடுத்தல், தழுவு |
அகல் | நீங்கு, விளக்கு ஏற்றும் தானம் |
அறை | சொல், அடி, திரை, வீட்டின் பகுதி |
அடி | கீழ்ப்பகுதி, பாதம், அடித்தல் |
ஆற்றல் | வல்லமை, திறமை |
ஆரம் | மாலை, சந்தனம் |
ஆடு | ஒருவகை விலங்கு, ஆடுதல் |
ஆடி | கண்ணாடி, தமிழ்மாதம், கூத்தாடி |
ஆறு | எண், நதி, வழி |
ஆவி | உயிர், நீராவி, உயிரெழுத்து |
ஆலம் | ஆலமரம், நஞ்சு,கடல்,கலப்பை |
இசை | புகழ், இணங்கு, பண் |
இதழ் | பூவிதழ், உதடு |
இடி | தாக்கு, வானிடி, முழக்கம், உறுதிச்சொல். |
இறை | கடவுள், நீர் இறைத்தல் |
இரை | ஒலிசெய், உணவு |
ஈ | கொடு, பறவை, இரத்தல், அழிவு |
உரம் | எரு, ஞானம், மதில், வலிமை |
உரம் | எரு, ஞானம், மதில், வலிமை |
உடு | உடுத்து, விண்மீன், ஒடக்கோல், அகமி |
உரை | சொல், தேய் |
உறை | மேலுறை, வசி |
உடுக்கை | ஆடை, ஒருவித இசைக்கருவி |
ஊதை | பருத்தல், ஊதுகருவி, குளிர்க்காற்று |
எகினம் | அன்னம், நீர்நாய், புளியமரம் |
ஏறு | காளை, ஆண் சிங்கம், மேலே செல் |
ஏனம் | பாத்திரம், பன்றி |
ஏற்றம் | நீர் இறைக்கும் கருவி, உயர்வு |
ஐயம் | சந்தேகம், பிச்சை |
ஓதி | கூந்தல்,ஓதுபவன், ஓந்தி |
கலை | ஆடை, கல்வி, கலைத்தல் |
களை | நீக்கு, பயிருக்குக் கேடான புல் |
கடி | காவல், காப்பு, கூர்மை, விரைவு |
கழை | கரும்பு, மூங்கில் |
கலி | பாவகை, சனி, துன்பம், வறுமை |
கரி | யானை, சாட்சி, அடுப்புக்கரி |
கல் | பாறைக்கல், படி, தோண்டு |
கவி | குரங்கு, கவிஞர், பாடல் |
கம்பம் | தூண், நடுக்கம் |
கப்பல் | கலம், நாவாய் |
கா | காப்பாற்று, சோலை, காவடி, பூப்பெட்டி |
காயம் | பெருங்காயம், புண், உடல், நிலைபேறு |
கார் | கருமை, மேகம் |
கிளை | மரக்கிளை, உறவு |
குடி | குடித்தல், குடும்பம், குடிப்பழக்கம் |
குழவி | குழந்தை, சேய், குழவிக்கல் |
குடை | கைக்குடை, தோண்டு |
கூடு | சேர், உடம்பு, பறவைக்கூடு |
கோள் | கிரகம், புறம்கூறுதல் |
சங்கம் | சங்கு, கூட்டம் |
சுரம் | வழி, வெப்பம் |
சேனை | படை, தானை, கிழங்கு |
சோழன் | கிள்ளி, வளவன், அபயன் |
தாள் | பாதம், முயற்சி, காகிதம் |
திரை | அலை, வெற்றிலை |
சந்திரன் | திங்கள், மாதம், கிழமை, மதி, பிறை, நிலவு, நிலா, அம்புலி |
திரு | உயர்ந்த அழகு, செல்வம், மேன்மை, இலக்குமி, மரியாதை அடை. |
திரி | அலை, விளக்குத் திரி |
துணி | துண்டு செய், ஆடை |
தை | தைத்தல், மாதம் |
தையல் | பெண், தைத்தல் |
நகை | சிரிப்பு, அணிகலன் |
நாண் | கயிறு, வெட்கம், வட்டத்தின் நடுவில் வரையும் கோடு |
நாடு | விரும்பு, தேசம் |
நாகம் | பாம்பு, துத்தநாகம் |
படி | வாசி, படிக்கட்டு, அளக்கும் கருவி |
பள்ளி | கல்விக்கூடம், படுக்கை, தொழுமிடம் |
பணி | பணிவு, அணிகலன் |
பார் | உலகம், காண் |
புயல் | மேகம், பெருங்காற்று |
பிழை | தவறு, உயிர் தப்புதல் |
பிடி | பெண் யாணை, பிடித்துக்கொள் |
மதி | அறிவு, நிலா |
மடி | சோம்பல், இற |
மறம் | வீரம், பாவம் |
மணம் | திருமணம், கலத்தல் |
மா | பெரிய, விலங்கு, மாமரம் |
மாலை | பொழுது, தார் |
மாசு | குற்றம், தீது |
முடி | தலை, செய்துமுடி, கட்டு |
மெய் | உண்மை, உடம்பு |
வரை | மலை, தீட்டு, எல்லை |
வலி | வலிமை, நோவு |
வாரணம் | யானை, கோழி, கடல், சங்கு |
விடை | பதில், காளை |
வேங்கை | புலி, வேங்கைமரம் |
வேழம் | யானை, கரும்பு |
சூரியன் | ஞாயிறு, பகலவன், கதிரவன், ஆதவன், பரிதி, அருக்கன், வெய்யோன், அனலி, இரவி |
வானம் | ஆகாயம், வான், விசும்பு, விண்ணகம், விண் |
நெருப்பு | தீ, அக்கினி, அழல்,தழல், கனல் |
பாட்டு | கவி, கவிதை, செய்யுள், பா, பாடல்,கீதம் |
புத்தகம் | ஏடு, நூல், இழை, பனுவல் |
பூமி | உலகம்,புவி,பார், வையகம், அகிலம், தரணி, குவலயம் |
நித்திரை | துயில், உறக்கம், துஞ்சல், தூக்கம் |
உடல் | தேகம், உடம்பு, சரீரம், மேனி, யாக்கை |
ஒலி | தொனி, சத்தம், அரவம், ஓசை, ஆரவாரம் |
ஒளி | கதிரவன், வெளிச்சம், விளக்கு. |
சினம் | கோபம். சீற்றம், காய்தல், முனிதல் |
மனைவி | மனையாள், இல்லாள், தலைவி, கிழத்தி |
உண்மை | மெய், சத்தியம், வாய்மை |
தலை | சிரம், உச்சி |
பாம்பு | சர்ப்பம், அரவம், பணி |
குழந்தை | மகவு, சேய், பிள்ளை, குழவி, சிசு. மழலை |
சிரிப்பு | புன்னகை, நகைப்பு, முறுவல் |
அரசன் | மன்னன், வேந்தன், கோன், கோ |
வனம் | காடு, ஆரணியம், கானகம், அடவி |
ஆசை | ஆவல், விருப்பம், அவா |
வயல் | பழனம், கழனி, கமம் |
சண்டை | சமர், அமர், போர், யுத்தம் |
சோறு | அன்னம், சாதம், அடிசில், உணவு, ஊன், ஆகாரம், சாப்பாடு. |
இரத்தம் | குருதி, உதிரம், சோரி, கறை |
குதிரை | அசுவம், துரகம், புரவி, மா,பரி |
நீர் | தண்ணீர், புனல், சலம், அப்பு |
தண்டனை | அபராதம், குற்றம், தண்டம் |
அழகு | எழில், வனப்பு, கவின், வடிவு, அணி |
வீடு | இல்லம், மனை, அகம், உறையுள் |
சிங்கம் | சியம், கேசரி, மடங்கல், அரி |




