ஒருமை பன்மை அறிதல்

ஒருமை பன்மை அறிதல்

ஒருமை பன்மை அறிதல்

இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து ஒருமை பன்மை அறிதல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.

ஒருமை

ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிப்பது.ஒருமையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு ஒருமையில் தான முடியவேண்டும்

(எ.கா.) மரம் சாய்ந்தது, அறிஞர் வந்தார்

பன்மை

பன்மை என்பது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைக் குறிப்பது.

பன்மையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு பன்மையில் தான் அமைய வேண்டும்

(எ.கா.) மரங்கள் சாய்ந்தன, கருவிகள் பழுதடைந்தன

தன்மைப் பெயர்

ஒருமைபன்மை
யான்யாம், யாங்கள்
நான்நாம், நாங்கள்

முன்னிலைப் பெயர்

ஒருமைபன்மை
நீநீர், நீங்கள்

படர்க்கைப் பெயர்

ஒருமைபன்மை
அவன், அவள்அவர்கள்
அதுஅவை
தம்பிதம்பிமார்
தங்கைதங்கைமார்
கண்கண்கள்
நரிநரிகள்
பிழைதிருத்தம்
அவைகள்அவை
அதுகள்அது
எனது மகள்என் மகள்
ஒரு ஊர்ஓர் ஊர்
நாட்கள்நாள்கள்
பொதுவழி அல்லபொதுவழி அன்று
சில அறிஞர்அறிஞர் சிலர்
அவன் அல்லஅவன் அல்லன்
அவள் அல்லஅவள் அல்லள்
அவர்கள் அல்லஅவர்கள் அல்லர்
அவை அன்றுஅது அன்று
அது உரிமையானதுஅஃது உரிமையானது
யான் தாம் வந்தோம்யான் தான் வந்தேன்
நான் தாம் சென்றேன்நான் தான் சென்றேன்
நீர் தான் கொடுத்தீர்நீர் தாம் கொடுத்தீர்
நாம் தான் போவோம்நாம் தான் போவோம்
நீர் தான கொடுத்தீர்நீர் தாம் கொடுத்தீர்
அவை தான் ஓடினஅவை தாம் ஓடின
ஒருமைபன்மை
அன்றுஅல்ல
தான்தாம்
பிழைமன்னர் தன் குடிகளிடம் அன்பாய் இருப்பார்.
திருத்தம்மன்னர் தம் குடிகளிடம் அன்பாய் இருப்பார்.
பிழைஆமைகள் வேகமாய் ஓடாது
திருத்தம்ஆமைகள் வேகமாய் ஓடா.
பிழைநான் கொடுத்த புத்தகம் இது அல்ல
திருத்தம்நான் கொடுத்த புத்தகம் இது அன்று
பிழைஇதைச் செய்தவன் இவன் அல்ல
திருத்தம்இதைச் செய்தவன் இவன் அல்லன்
பிழைஒருகாட்டில் ஒரு சிங்கமொன்று இருந்தது
திருத்தம்ஒருகாட்டில் சிங்கமொன்று இருந்தது
பிழைபாலும் தேனும் கிடைத்தது
திருத்தம்பாலும் தேனும் கிடைத்தன.
பிழைதமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன
திருத்தம்தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது
பிழைதிட்டங்கள் தீட்டப்பட்டது
திருத்தம்திட்டங்கள் தீட்டப்பட்டன
பிழைகந்தன் தேவியை மணந்தார்
திருத்தம்கந்தன் தேவியை மணந்தான்

ஒரு, அது எனும் சொல்லையடுத்து முதலெழுத்து உயிர் எழுத்தாக உள்ள சொல் வந்தால் ஒரு-ஓர் என்றும் அது-அஃது என்று வரும்.

ஒவ்வொரு என்னும் சொல்லையடுத்து நாளும், காசும் என்பன போல ஒருமைச் சொற்களே வர வேண்டும்.

1 thought on “ஒருமை பன்மை அறிதல்”

  1. You just helped us lot by doing this…
    I felt it difficult to find notes after changing the tnpsc syllabus..
    But you changed the thought.
    Thank you!

    Reply

Leave a Comment