ஒருபொருள் பன்மொழி

ஒருபொருள் பன்மொழி
ஒருபொருள் பன்மொழி (ஒருபொருட் பன்மொழி)

1. திருமால் குன்றம் உயர்ந்தோங்கி நிற்கிறது.

2. அந்த ஏழைக் குழந்தையின் கண்கள் குழிந்தாழ்ந்து காணப்படுகின்றன.

இவ்விரு தொடர்களிலும் ஒரு பொருள் குறித்துத் தொடர்ந்துவரும் இருசொற்கள் உள்ளன. அவை உயர்ந்தோங்கிய, குழிந்தாழ்ந்து என்பவை. உயர்ந்து, ஓங்கிய ஆகிய இரு சொற்களும், உயர்ந்த என்னும் ஒரே பொருளிலும், குழிந்து, ஆழ்ந்து என்பவை குழிந்து என்னும் ஒரே பொருளிலும் வருகின்றன.

ஒரு பொருளையே தரும் பல சொற்கள் தொடர்வது ஒருபொருட் பன்மொழியாகும்.

(எ-டு)

1 நடுமையம்.

2. மீமிசை ஞாயிறு.

எனும் தொடர்களில் நடுப்பகுதி எனும் ஒரே பொருளை உணர்த்தும் நடு, மையம் எனும் இருசொற்களும், மேற்பகுதி எனும் பொருளைத் தரும் மீ, மிசை எனும் இருசொற்களும் இணைந்து வந்து ஒரே பொ பொருளை உணர்த்தியுள்ளன.

'ஒருபொருட் பன்மொழி சிறப்பி னின்வழா' – நன்னூல்.