இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இரு பொருள் தரும் சொற்கள் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.
இப்பகுதியில் ஒரு சொல்தரும் இரண்டு பொருள்களை எழுதவேண்டும். சில வேளைகளில் இருபொருள் தரும் ஒரு சொல் என்று கேட்பதுவும் உண்டு.
| அம்பி | படகு, தோணி |
| அடவி | காடு, மிகுதி |
| அல் | இருள், வறுமை |
| ஆ | பசு, இரக்கம் |
| ஆக்கம் | செல்வம், காற்று |
| ஆறு | எண் (6), நதி |
| ஆழி | மோதிரம், கடல் |
| இன்னல் | துன்பம், கவலை |
| இந்து | சமயம், மதம் |
| இகல் | பகை, வலிமை |
| இடர் | துன்பம், நோய் |
| இருள் | பகை, துன்பம் |
| உழுவை | புலி, மீன்வகை |
| ஏர் | அழகு, கலப்பை |
| நூல் | ஆடைநூல், பாடநூல் |
| ஈனும் | தரும், உண்டாக்கும் |
| தெறு | பகை, தண்டித்தல் |
| மெய் | உடல், உண்மை |
| நாமம் | பெயர், அச்சம் |
| நுதல் | நெற்றி, புருவம் |
| நமன் | எமன், நம்மவன் |
| நடலை | துன்பம், அசைவு |
| நகை | நகைத்தல், அணிகலன் |
| குஞ்சி | தலைமுடி, விருது |
| குன்று | மலை, மேடு |
| கான் | காடு, மணம் |
| கழல் | பாதம், காலணி |
| கமலம் | தாமரை, நீர் |
| கிரி | மலை, பன்றி |
| கிளை | சுற்றம், மரக்கிளை |
| கவிகை | குடை, ஈகை |
| கரம் | கை, வரி |
| புயல் | மேகம், நீர் |
| புனல் | நீர், ஆறு |
| புத்தி | அறிவு, மனம் |
| புள் | பறவை, வண்டு |
| பணை | மூங்கில், பெருமை |
| படி | நூலைப்படி, வாயிற்படி |
| பிணி | நோய், துன்பம் |
| தலை | சிறப்பு, உச்சி |
| துடி | பறை, உதடு |
| திரை | அலை, சுருள் |
| திங்கள் | நிலவு, மாதம் |
| மாதிரம் | மலை, ஆகாயம் |
| மனை | வீடு, மனைவி |
| மரை | மான், தவளை |
| மாலை | காலம், பூமாலை |
| மதலை | துணை, குழந்தை |
| கோடு | தந்தம், கொம்பு |
| கேழல் | பன்றி, நிறம் |
| கேசரி | சிங்கம், இனிப்பு |
| மேனி | உடல், நிறம் |
| மேதி | எருமை, நெற்களம் |
| சேய் | குழந்தை, மூங்கில் |
| சந்தம் | அழகு, நிறம், ஓசை நயம் |
| சிரம் | தலை, உச்சி |
| சுவடி | நூல், ஓலைப்புத்தகம் |
| வனம் | காடு, சோலை |
| ஞாலம் | உலகம், விந்தை |
| விரை | மணம், தேன் |
இத்தலைப்பில் கேள்விகள் புத்தகத்திலோ (ம) வெளியே இருந்தோ கேட்டாகப்படும் எனவே கொடுக்கபட்டுள்ள அனைத்து இல்லாமல் மேலும் சிலவற்றை படித்துக்கொள்ளவும்.