ஆவணங்களின் தலைப்பு – கோப்புகள் கடிதங்கள் மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்

ஆவணங்களின் தலைப்பு – கோப்புகள் கடிதங்கள் மனுக்கள் – மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்

ஆவணங்களின் தலைப்பு


1. ஆவணங்கள்  

  • ஒரு ஆவணம் என்பது ஒரு முக்கியமான தகவலைச் சீராக பதிவு செய்யும் உருப்படியாகும்.
  • இது அரசு, தனியார், கல்வி, சட்டம் போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுகிறது.
ஆவணங்களின் வகைகள்:

i. அரசு ஆவணங்கள் (Government Documents)
  • பிறப்புச் சான்றிதழ் (Birth Certificate)
  • அடையாள அட்டை (Aadhar card)
  • பாஸ்போர்ட் (Passport)
  • வரி செலுத்திய விவரங்கள் (Tax Documents)

ii. நியாயப் பூர்வமான ஆவணங்கள் (Legal Documents)

  • நீதிமன்ற உத்தரவு (Court Order)
  • உடன்படிக்கை (Agreement)
  • பத்திரங்கள் (Deeds)
  • வக்கீல் மூலம் செய்யும் சத்தியப்பிரமாணம் (Affidavit)

iii. கல்வி சார்ந்த ஆவணங்கள் (Educational Documents)

  • பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் (School & College Certificates)
  • மார்க் சீட் (Mark Sheet)
  • மாற்று சான்றிதழ் (Transfer Certificate)

iv. வணிக மற்றும் வங்கி ஆவணங்கள் (Business and Banking Documents)

  • வணிகப் பதிவு ஆவணங்கள்
  • கம்பனிப் பதிவு ஆவணங்கள்
  • வங்கி கணக்கு விவரங்கள்

2. கோப்புகள் (Files)

கோப்புகள் என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சார்ந்த ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் தகவல்களை சேகரித்து பரிசீலிக்க உருவாக்கப்படும் தொகுப்பு ஆகும்.

கோப்புகளின் முக்கிய அம்சங்கள்:

  • ஒவ்வொரு கோப்பிற்கும் தலைப்பு மற்றும் குறிப்பு (Title & Note) இருக்க வேண்டும்.
  • கோப்புகள் வசதியாக அணுகவும், திருத்தவும், சேமிக்கவும் செய்யப்பட வேண்டும்.
  • அரசு அலுவலகங்களில் கோப்பு முறையைப் பயன்படுத்தி முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

கோப்புகளின் வகைகள்:

  1. நிர்வாகக் கோப்புகள் (Administrative Files)
  2. சட்டம் சார்ந்த கோப்புகள் (Legal Files)
  3. நிதி மற்றும் கணக்கீட்டு கோப்புகள் (Financial Files)
  4. திட்டமிடல் மற்றும் வளர்ச்சி கோப்புகள் (Planning Files)

3. கடிதங்கள் (Letters)

கடிதம் என்பது ஒரு தகவலை மற்றவர்களுக்கு உரிய முறையில் வழங்குவதற்காக எழுதப்படும் ஆவணம் ஆகும்.

கடிதங்களின் முக்கிய வகைகள்:

  1. அரசு கடிதம் (Official Letter) 
  2. தனிப்பட்ட கடிதம் (Personal Letter)
  3. வணிகக் கடிதம் (Business Letter)
  4. கோரிக்கை கடிதம் (Request Letter)

ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தின் அமைப்பு: 

  1. முகவரி (Address)
  2. தேதி (Date)
  3. குறிப்பு (Subject)
  4. மெயின் உள்ளடக்கம் (Main Content)
  5. முடிவுரை (Conclusion)
  6. கையொப்பம் (Signature)

4. மனுக்கள் (Petitions)

மனு என்பது ஒரு அதிகாரப்பூர்வ கோரிக்கையாகும். இது தனிநபர் அல்லது குழுவால் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் கோரிக்கையாக இருக்கும்.

மனுவின் முக்கிய பயன்பாடுகள்:

  • அரசு உதவியை பெற (e.g. ஒழுங்குமுறை வேலைவாய்ப்பு கோரிக்கை)
  • நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தல் (e.g. சாலை வசதி, குடிநீர் வசதி)
  • அதிகாரிகளிடம் புகார் அளிக்க (e.g. ஊழல், முறைகேடு)

ஒரு மனுவின் அமைப்பு:

  1. தலைப்பு (Title
  2. அனுப்புநர் விவரங்கள் (Sender Details)
  3. கோரிக்கையின் காரணம் (Reason for Request)
  4. ஆதாரங்கள் (Supporting Documents)
  5. கையொப்பம் (Signature)

5. மொழிப்பெயர்ப்பு (Translation of Documents)

மொழிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் உள்ள தகவலை மற்றொரு மொழிக்கு பொருள் மாறாமல் மாற்றுதல் ஆகும்.

மொழிபெயர்ப்பு எதற்கு முக்கியம்?

  • அரசு ஆவணங்களை அனைவரும் புரிந்துகொள்ள
  • சட்ட ஆவணங்களை சரியாக விளக்க
  • விவசாயம், மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் தகவலை பரப்ப.

மொழிபெயர்ப்பு செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

  • பொருளை மாற்றாமல் மொழிபெயர்க்குதல்
  • வழக்கமான சொற்களை பயன்படுத்துதல்
  • சட்டபூர்வமான மற்றும் தொழில்நுட்பமான மொழிகளை சரியாக மாற்றுதல்


ஆவணங்கள் மற்றும் அவற்றின் தமிழ் மொழி பெயர்ப்பு:


Aadhaar Card அடையாள அட்டை 
Voter ID Card வாக்காளர் அட்டை
Passport கடவுச்சீட்டு
PAN Card பான் அட்டை 
Driving License ஓட்டுநர் உரிமம்
Vehicle Registration Certificate வாகன பதிவு சான்றிதழ்
Duplicate Vehicle Ownership மற்றுமொரு வாகன உரிமம்
Vehicle Insurance Document வாகன காப்பீடு ஆவணம்
Ration Card குடும்ப அட்டை
Name Change Certificate பெயர் மாற்றச் சான்றிதழ்
State Resident ID Card மாநில குடிமக்கள் அட்டை 
Loan Waiver Certificate கடன் தள்ளுபடி சான்றிதழ்
Welfare Scheme ID Card நலத்திட்ட அடையாள அட்டை
Birth Certificate பிறப்பு சான்றிதழ்
Death Certificate இறப்பு சான்றிதழ்
Marriage Certificate திருமணச் சான்றிதழ்
Divorce Certificate விவாகரத்து சான்றிதழ்
Caste Certificate சாதி/விலக்கு சான்றிதழ்
First Graduate Certificate முதல் பட்டதாரி சான்றிதழ்
Community Certificate சமூக சான்றிதழ்
Domicile Certificate குடியுரிமைச் சான்றிதழ்
Income Certificate வருமானச் சான்றிதழ்
Employment ID Card தொழிலாளர் அடையாள அட்டை 
Economically Weaker Section (EWS) Certificate வளர்ச்சி சான்றிதழ்
Business/Trade License தொழில் உரிமம்
Agricultural Income Certificate வேளாண்மை வருமானச் சான்றிதழ்
Educational Certificates (SSLC, HSC, Degree Certificates) கல்விச் சான்றிதழ்
Student ID Card மாணவர் அடையாள அட்டை
Scholarship Eligibility Certificate கல்வி விலக்கு சான்றிதழ்
பட்ட – Land Ownership Document பட்டா 
Chitta – Land Revenue Document சிட்டா 
Property Ownership Document உடமைச்சான்று
Encumbrance செர்டிபிகேட் (EC) உரிமை மாறுதல் சான்றிதழ்
Grama Natham Certificate for Village Land Ownership கிராம நத்தம் சான்றிதழ்
Health Card ஆரோக்கிய அட்டை
Disability Certificate/ID card மாற்றுத் திறனாளி அடையாள அட்டை
Health Insurance Card மருத்துவக் காப்பீட்டு அட்டை
Medical Certificate மருத்துவச் சான்றிதழ்
Senior Citizen Pension Card முதியோர் ஓய்வூதிய அட்டை
Pension Account Certificate ஓய்வூதிய கணக்கு சான்றிதழ்
Food Security Card அரசு உணவுத் திட்ட அட்டை
Housing Scheme Beneficiary Certificate புதிய வீட்டு மானியச் சான்றிதழ்
Prohibition Certificate  மதுவிலக்கு சான்றிதழ்
Court Certificates  நீதிமன்றச் சான்றிதழ்கள்
Police Clearance Certificate முன்னாள் காவல்துறை சான்றிதழ்
Surety Bond Certificate மூலோபாய சான்றிதழ்



சில ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள்:


Account கணக்கு
Accountant கணக்கர்
Allowance படி
Affidavit இணைப்பு
Annexure பின்னிணைப்பு
Appointment பணியில் அமர்த்தும் ஆணை
Attention கவனம்
Auditor தணிக்கையாளர்
Branch கிளை
By order உத்திரவுப்படி
By law சட்ட விதி
Budget நிதிநிலை அறிக்கை
Cancel நீக்கல்
Cashier காசாளர்
Casual leave தற்செயல் விடுப்பு
Challan செலுத்தும் சீட்டு
Confidential இரகசியமான
Department துறை
Design வடிவமைப்பு
Directrate இயக்ககம்
Document ஆவணம்
Enquiry விசாரணை
Engineer பொறியாளர்
Executive officer நிர்வாக அதிகாரி
Endors வலியுறுத்தல்
Faculty புலம்
Fine ஒறுப்புக் கட்டணம்
File கோப்பு
Form படிவம்
Function செயல்
Gazette அரசிதழ்
Grant மானியம்
Government order அரசாணை
Honorarium மதிப்பூதியம்
Increment ஊதிய உயர்வு
Index அட்டவணை
Invoice விவரப்பட்டியல்
Interview நேர்காணல்
Limited வரையறை
Memorandum குறிப்பாணை
Medical Leave மருத்துவ விடுப்பு
Memo குறிப்பு
Official அலுவலகத் தொடர்பான
Order ஆணை
Policy கொள்கை முடிவு
Quatation விலைப்புள்ளி
Record ஆவணம்
Revenue வருவாய்
Reference பார்வை
Tender ஒப்பந்தப்புள்ளி
Vacant காலியிடம்
Waming எச்சரிக்கை


கடிதம், கோப்பு, மற்றும் மனுகளில் வரும் ஆங்கில சொற்கள்:



Address  முகவரி
Date  தேதி 
From  அனுப்புநர்
To பெறுநர்
Subject  குறிப்பு 
Main Content  மெயின் உள்ளடக்கம்
Conclusion  முடிவுரை 
Signature  கையொப்பம்
Respected sir  மதிப்பிற்குரிய ஐய்யா
Thank you  நன்றி 
Permission letter  அனுமதி கடிதம்
Collector மாவட்ட ஆட்சித் தலைவர்
DRO (District Revenue Officer) மாவட்ட வருவாய் அலுவலர்
DDO (Divisional Development Officer) கோட்டாட்சித் தலைவர்
Tashildar வட்டாட்சியாளர்
Revenue Inspector (R.I.) வருவாய் ஆய்வாளர்
Commissioner ஆணையாளர்
Inspector ஆய்வாளர்
Sub Inspector துணை ஆய்வாளர்
Clerk எழுத்தர்
Superintendent கண்காணிப்பாளர்
Registrar பதிவாளர்
Vice Chancellor துணை வேந்தர்
Chancellor வேந்தர்
Principal கல்லூரி முதல்வர்
Senior முன்னவர்
Junior பின்னவர்
Secretary செயலாளர்
Chief-Secretary தலைமைச் செயலாளர்
Department Secretary துறைச் செயலாளர்
Special Officer தனி அலுவலர்
Manager மேலாளர்
Typist தட்டச்சு செய்பவர்
Record clerk ஆவண எழுத்தர்
Folder    கோப்புறை
File கோப்பு
Figure  படம்